மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Photo of author

By Parthipan K

மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

Parthipan K

Attention students! The order issued by the District Collector!

மாணவர்களின் கவனத்திற்கு! மாவட்ட ஆட்சியர் வெளியிட்ட உத்தரவு!

திருவாரூர் மாவட்ட ஆட்சியர்  அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிவிப்பில் .அரசு மற்றும் அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் மூன்றாம்  ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ மற்றும்  மாணவிகளுக்கு தமிழக அரசு சார்பில் இலவச கல்வித்திட்டத்தின் கீழ் எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது.

மேலும் முதுகலை ,பாலிடெக்னிக் மற்றும் தொழிற்படிப்பு படிக்கும் மாணவர் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ 2  லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.பிற்படுத்தப்பட்டோர் ,மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இன மாணவ மாணவிகளுக்கு கல்வி உதவித்தொகை இணையதளத்தில் கடந்த மாதம் 10 ஆம் தேதி முதல் செயல்பட தொடங்கி உள்ளது.

அவர்களின் சான்றிதழ்களை புதுப்பிக்க இன்றே கடைசி நாள். மேலும் புதிய இனங்களுக்கு டிசம்பர் 15 ஆம் தேதி முதல் இணையதளம் செயல்பட தொடங்கும்.மேலும் விவரங்களுக்கு மாவட்ட கலெக்டெர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் மேலும் விவரங்கள் பெற www.bcmw.tn.gov.in/welfschemes.htm#scholarshipschemes என்ற இணையதளத்தில் சென்று தெரிந்து கொள்ளலாம்.