மாணவர்கள் கவனத்திற்கு.. 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பப்ளிக் எக்ஸாம் ரிசல்ட் வெளியீடு எப்போது??
தமிழகத்தில் ஆண்டுதோறும் மார்ச்-ஏப்ரல் மாதங்களில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடைபெறுவது வழக்கம்.
அதன்படி தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளியில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பு பயின்ற மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் முடிந்து தற்பொழுது கோடை விடுமுறை அளிக்கப்பட்டு இருக்கிறது.
12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 01 அன்று தொடங்கிய பொதுத்தேர்வு மார்ச் 22 அன்று நிறைவு பெற்றது.11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 04 அன்று ஆரம்பமான பொதுத்தேர்வு மார்ச் 25 அன்று நிறைவடைந்தது.
அதன் பின்னர் மார்ச் 26 அன்று தொடங்கப்பட்ட 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 08 அன்று நிறைவடைந்தது.
இந்நிலையில் பொதுத்தேர்வு ரிசல்ட்டை எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில் மாணவர்கள் உள்ளனர்.தற்பொழுது 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள் பணி நிறைவுற்று இருக்கிறது.வருகின்ற மே 06 அன்று 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் வெளியிடப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்து இருப்பதால் அதற்கான பணிகள் விறு விறுப்பாக நடைபெற்று வருகிறது.
அதேபோல் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்ட் மே 10 அன்று வெளியிடப்பட இருக்கிறது.தேர்வு முடிவு குறித்த விவரங்கள் பள்ளியில் மாணவர்கள் கொடுத்துள்ள தொலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தியாக அனுப்பி வைக்கப்பட இருக்கிறது.
மேலும் tnresult.nic.in அல்லது dge.tn.gov.in என்ற இணையதளங்களில் 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ரிசல்டை தெரிந்து கொள்ள முடியும்.தேர்வு முடிவுகள் எப்படி இருந்தாலும் அதை பாசிட்டிவாக எடுத்துக் கொண்டு வாழ்க்கையில் அடுத்த கட்டத்தை நோக்கி மாணவர்கள் பயணிக்க வேண்டும்.