தொலைதூரக் கல்வி தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் குறித்து பல்கலைக்கழகம் வெளியிட்ட அறிவிப்பு!
பல்கலைக்கழக மானிய குழு கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அந்த உத்தரவில் ஆன்லைன் தொலைதூர கல்வி மற்றும் நேரடி கல்வி என அனைத்து முறைகளிலும் பெரும் பட்டங்களுக்கு இடையே எந்த வேறுபாடும் இல்லை எனவும் கூறியது. மேலும் அனைத்து டிகிரி பட்டங்களும் ஒரே மதிப்பு தான் எனவும் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து புதிய கல்வி கொள்கையின் அடிப்படையில் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டு வருகின்றது
அதன் அடிப்படையில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சில் பல்கலைக்கழக மானிய குழு பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளது எனவும் யுஜிசி விளக்கம் அளித்துள்ளது. மேலும் பாடத்திட்டம் கற்பிக்கும் முறை, பல் நுழைவு வெளியேறுதல், விருப்ப தேர்வு அடிப்படையில் தர மதிப்பீடு அமைப்பு முறை போன்ற முன்னெடுப்புகளும் அதில் அடங்கும் என தெரிவித்தது.
இந்நிலையில் சென்னை பல்கலைக்கழகத்தின் டிசம்பர் 2022 ஆம் ஆண்டின் தொலைதூர கல்வி படிப்புகளுக்கான ஹால் டிக்கெட் இன்று முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதனால் தேர்வு எழுதும் மாணவர்கள் www.ideunom.ac.in என்ற இணையதள பக்கத்தில் இன்று மாலை முதல் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளது. சென்னை பல்கலைக்கழகத்தின் தொலைதூர கல்வி நிறுவனத்தின் தேர்வுகள் இம்மாதம் பதினெட்டாம் தேதி முதல் தொடங்க உள்ளது அதனால் தற்போது இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.