என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

0
371
Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!
Attention students writing NMMS exam! Hall Ticket Release Today!

என்எம்எம்எஸ் தேர்வு எழுதும் மாணவர்களின் கவனத்திற்கு! ஹால் டிக்கெட் இன்று வெளியீடு!

தமிழகத்தில் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெற என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படுகிறது. இது குறித்து தேர்வுத் துறை அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில் மத்திய அரசின் தேசிய வருவாய் வழி மற்றும் திறன் படிப்பு உதவித்தொகை திட்டத்தின் மூலம் தான் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளில் எட்டாம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை வழங்கப்படுகின்றது.

இந்த உதவி தொகையை பெற வருடம் தோறும் மாணவர்களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்தப்படும். இந்த தேர்வின் மூலம் தமிழகத்தில் 6,695 பேர் உள்பட நாடு முழுவதும் ஒரு லட்சம் மாணவர்கள் தேர்வு செய்யபடுவார்கள். அந்த மாணவர்கள் ஒன்பதாம் வகுப்பு முதல் பிளஸ் டூ முடிக்கும் வரை மாதம் தோறும் ரூ 1000 உதவித்தொகை வழங்கப்படும்.

மேலும் நடப்பாண்டில் என்எம்எம்எஸ் தேர்வு வரும் பிப்ரவரி 25 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த டிசம்பர் மாதம் தொடங்கி பிப்ரவரி 7 ஆம் தேதி முடிவடைந்தது.

இந்நிலையில் தேர்வு எழுத தகுதி பெற்ற மாணவர்கள் பெயர் பட்டியல் மற்றும் தேர்வுக்கூட அனுமதி சீட்டு தேர்வுத்துறை இணையதளமான www.dge1.tn.gov.in ல் இன்று வெளியிடப்படுகின்றது. மேலும் பள்ளித் தலைமை ஆசிரியர்கள் அவற்றை பதிவிறக்கம் செய்து மாணவர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Previous articleதமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட தகவல்! நேரடியாக தான் இவர்களுக்கு பணி நியமனம்!
Next article குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்!