குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

0
187
#image_title

 குடிமகன்களுக்கு அலார்ட்! ஒரு கையில் மது பாட்டில் இன்னொரு கையில் சிகரெட்! மது போதையால் நேர்ந்த விபரீதம்! 

மது போதையில் இருந்து இளைஞர் சிகரெட்டை பற்ற வைத்ததால் அவரது உடலில் தீப்பிடித்து எரிந்துள்ளது. பரபரப்பூட்டும் இந்த சம்பவம் நாமக்கல் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது.

நாமக்கல் மாவட்டம் மஜீத் தெருவை சேர்ந்தவர் முபாரக். இவர் நேற்று இரவு மது அருந்தி உள்ளார். பின்னர் மதுவை கையில் வைத்துக்கொண்டு சிகரெட்டை பற்ற வைத்துள்ளார். அப்போது திடீரென எதிர்பாராத விதமாக அவரது உடலில் தீப்பிடித்து எரிய தொடங்கியது. திடீரென தீப்பிடித்ததால் அவர் வலியால் அலறி துடித்தார்.

இந்த தீ விபத்து குறித்து சம்பவம் நடந்த இடத்திற்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீசார் முபாரக்கை மீட்டு நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். அவரது உடலில் 50 சதவீதத்திற்கு மேல் தீக்காயம் ஏற்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து குறித்து காரணம் எதுவும் தெரியாத நிலையில் போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்துள்ளனர். அப்போது முபாரக் கையில் மதுவுடன் ஒரு கையால் சிகரெட்டை பற்ற வைத்ததும் அதன்பின்னர் திடீரென அவர் மீது தீப்பற்றியதும் பதிவாகி இருந்தன. அதன் பின்னரும் விபத்துக்கான காரணங்கள் போலீசாருக்கு தெரிய வந்து அவர்கள் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

மது போதையில் இருந்த இளைஞர் சிகரெட்டை பற்ற வைத்த போது தீப்பிடித்து எரிந்த சம்பவம் அந்த பகுதியில் பரப்பரப்பை உண்டாக்கியுள்ளது.