குரூப் தேர்வுகளுக்கு தயார் ஆக்கி வரக்கூடிய டிஎன்பிஎஸ்சி தேர்வர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றினை தேர்வாணையம் வெளியிட்டிருக்கிறது. அதன்படி, OMR ஸ்டாலின் புதிய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இது குறித்து டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான்லூயிஸ் வெளியிட்ட செய்தி குறிப்பில் தெரிவித்திருப்பதாவது :-
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் OMR தாளில் புதிய மாற்றங்களை மேற்கொண்டு இருப்பதாகவும், ஏற்கனவே 2025 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒருமுறை மாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும் ஆனால் தற்பொழுது அதை தாண்டி புதிய மாற்றம் ஒன்றை OMR தாளில் மேற்கொண்டு வெளியிட்டு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, குரூப் தேர்வுகளை எழுத தயாராகிக் கொண்டிருக்கும் மாணவர்கள் OMR Answer Sheet – Sample என்ற தலைப்பில் புதிய ஓஎம்ஆர் படிவத்தினை தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் சென்று பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் இந்த ஓஎம்ஆர் தாளில், தேர்வர்கள் தங்களுடைய 4 இலக்க வினாத்தாளினுடைய எண்ணை கருமை நிற பந்து முனை பேனாவை வைத்து வட்டங்களில் கருமை நிறத்தை தீட்ட வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும், ஓஎம்ஆர் விடைத்தாளின் பக்கம் 1 இல் பகுதி 2 இல் இருக்கக்கூடிய உறுதிமொழியை தேர்வர்கள் படித்து அதன் கீழ் அவர்களுடைய கையெழுத்தை போட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இனி வரக்கூடிய அனைத்து தேர்வுகளிலும் இந்த புதிய ஓஎம்ஆர் முறை தான் பின்பற்றப்படும் என்றும் குரூப்-1 தேர்விற்கு தயாராக இருக்கக்கூடிய தேர்வர்கள் ஜூன் 15ஆம் தேதி தேர்வு எழுத உள்ள நிலையில் இந்த புதிய ஓஎம்ஆர் தேர்வு தாள்களின் சாம்பிலை பதிவிறக்கம் செய்து பரிசோதனை செய்து பார்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.