உயர் நீதிமன்ற உத்தரவின்படி TNPSC தேர்வு எழுதக்கூடியவர்களுக்கு சில முன்னுரிமை விதிகள் குறிப்பாக தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்து வந்த நிலையில் அதில் சில முக்கிய விதிமுறைகளை திருத்தி தமிழ்நாடு அரசு புதிய அரசாணையை வெளியிட்டு இருக்கிறது.
அதன்படி, புதிதாக மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் பின்வருமாறு :-
✓ 1 ஆம் வகுப்பு முதல் தேர்வர்களின் பணிக்கு வரையறுக்கப்பட்டு இருக்கக்கூடிய கல்வித் தகுதி வரை தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு மட்டுமே முன்னுரிமை வழங்கப்படும்.
✓ கல்வி உரிமை சட்டத்தின் கீழ் வயதின் காரணமாக நேரடியாக 2 ஆம் வகுப்பு முதல் 8 ஆம் வகுப்பு கல்வியை நேரடியாக தமிழில் கற்று தேர்ச்சி பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
✓ தமிழகத்தை தவிர மற்ற மாநிலங்களில் தமிழ் மொழியினை பயிற்று மொழியாக பயின்று அதன் பின் தமிழ்நாட்டில் தங்களுடைய கல்வியை தமிழ் வழியில் படித்தவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்
✓ தமிழைத் தவிர பிற மொழிகளை பயிற்று மொழிகளாக கொண்டு தேர்வுகளை மட்டும் தமிழ் மொழியில் எழுதியவர்களுக்கு முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கப்பட மாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
✓ பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக தேர்வுகளை தமிழ் வழியில் எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கும் முன்னுரிமை வழங்கப்படாது
கட்டாயமாக கல்வி மற்றும் மாற்றுச் சான்றிதழ் மதிப்பெண் பட்டியல் போன்றவற்றில் தமிழ் வழி கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்து நியமன அலுவலர்களிடம் சமர்ப்பிக்க வேண்டும் என உயர் நீதிமன்ற உத்தரவுப்படி விதிகள் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.