ரயில் பயணிகள் கவனத்திற்கு.. டிக்கெட் முன்பதிவில் அதிரடி மாற்றம்!!
இந்தியாவில் பெரும்பாலான மக்கள் ரயிலில் பயணம் செய்வதை விரும்புகின்றனர்.மற்ற போக்குவரத்து செலவை காட்டிலும் ரயில் டிக்கெட் விலை மிகவும் குறைவு.குடும்பத்துடன் பாதுகாப்பான முறையில் பயணம் மேற்கொள்ள இந்த போக்குவரத்து உதவுகிறது.இது தான் ரயில் போக்குவரத்தின் ஸ்பெஷல்.
தினமும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் பயணம் மேற்கொண்டு வருவதால் இந்திய ரயில்வே நிர்வாகம் புது புது சேவைகளை அறிமுகப்படுத்தி வருகிறது.ரயில்வே நிர்வாகத்தின் சேவைக்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வரும் நிலையில் தற்பொழுது டிக்கெட் முன்பதிவில் புதிய மாற்றம் ஒன்றை கொண்டு வந்துள்ளது.
யூடிஎஸ் செயலி மூலம் ரயில் டிக்கெட் முன்பதிவு செய்யும் பயணிகளுக்கு என்று இந்த அதிரடி மாற்றத்தை ரயில்வே நிர்வாகம் கொண்டு வந்துள்ளது.யூடிஎஸ் செயலி வாயிலாக ரயில் நடைமேடை டிக்கெட்,மின்சார ரயில் டிக்கெட்,மாதாந்திர டிக்கெட் ஆகியவற்றை கட்டணம் செலுத்தி பெற்றுக் கொள்ள முடியும்.அதேபோல் முன்பதிவு செய்யாத டிக்கெட்களையும் உடனடியாக பெறும் வசதி இந்த செயலில் இருக்கின்றது.
GPS தகவலை கொண்டு செயல்படும் இந்த செயலி மூலம் ரயில் நிலையத்தில் இருந்து 2 கிலோ மீட்டர் தொலைவிற்குள் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய முடியும்.இதனால் தொலைதூர பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.இந்த நிலையில் யூடிஎஸ் செயலியை பயன்படுத்தி இனி வீட்டில் இருந்தபடி ரயில் டிக்கெட் எடுக்கலாம் என்று ரயில்வே நிர்வாகம் பயணிகளுக்கு நற்செய்தி ஒன்றை தெரிவித்து இருக்கிறது.
மேலும் யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் பெற்ற 2 மணி நேரத்திற்குள் ரயில் நிலையத்தை வந்தடைந்து விட வேண்டும்.ரயில் நிலையத்திற்குள் மட்டும் யூடிஎஸ் செயலி மூலம் டிக்கெட் எடுக்க முடியாது என்று ரயில்வே நிர்வாகம் தெரிவித்து இருக்கிறது.