ரயில் பயணிகளின் கவனத்திற்கு!! சேவையை ரத்து செய்த ரயில்வே துறை!!
தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதும் உள்ள மக்கள் பெரும்பாலும் ரயில் பயணத்தை விரும்புகிறார்கள்.மேலும் பல்வேறு பகுதியில் இருந்து வருபவர்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இதனால் ரயில் பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு ரயில்வே நிர்வாகம் பல்வேறு முக்கிய அறிவிப்புகளை எடுத்து வருகின்றது. பொதுமக்கள் பெரிதும் ரயில்களை பயன்படுத்தி வருகின்றன்னர். சொந்த ஊர்களுக்கு செல்லும் மக்கள் ,படிப்பதற்காக வெளி ஊர்களுக்கு செல்பவர்கள் ,வேலைக்காக வருபவர்கள் என்று பலர் ரயில் சேவைகளை பயன்படுத்தி வருகின்றனர்.
இவ்வாறு சாமானிய மக்களுக்கு இந்த ரயில் பயணம் மிகவும் பயனுள்ளதாக அமைகின்றது.இதில் வழங்கப்படும் குறைவான விலை டிக்கேட்களால் கோடி கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர்.இது ஏராளமான பொதுமக்களுக்கு மிகவும் சவுகரியமாக அமைகின்றது.
இந்த நிலையில் சில ரயில்கள் பராமரிப்பு பணிக்காக ரத்து செய்யப்படுகின்றது.இதனால் பொதுமக்கள் பலர் தினசரி வாழ்க்கையில் பல இன்னல்களை சந்திக்கின்றனர்.
அந்த வகையில் தற்பொழுது ஜூலை 24 ம் தேதியான இன்று திருச்சியில் ரயில்வே சந்திப்பில் பராமரிப்பு பணிகள் நடைபெற்று கொண்டு வருகின்றது. அதனால் மயிலாடுதுறையில் இருந்து திருச்சி செல்லும் ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதனை தொடர்ந்து பல ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட உள்ளது அந்த வகையில் ,திருச்சி இருந்து விருத்தாசலம் ரயில் ,வேளாங்கண்ணி இருந்து திருச்சி செல்லும் ரயில் மற்றும் கோவையில் இருந்து மயிலாடுதுறை செல்லும் ரயில் இவை அனைத்தும் ரத்து செய்யப்படுவதாக ரயில்வே துறை அறிவித்துள்ளது.
மேலும் பராமரிப்பு பணி முடிந்த உடன் வழக்கம் போல் ரயில்கள் அனைத்தும் இயக்கப்பட்டு ரயில் சேவை துவங்கும் என்று ரயில்வே துறை தெரிவித்துள்ளது.