சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!

Photo of author

By Parthipan K

சீருடைய பணியாளர் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் கவனத்திற்கு! இன்று சான்றிதழ் சரிபார்ப்பு!

தமிழ்நாடு சீருடைய பணியாளர் தேர்வு வாரியத்தில் 3,552 காலிப் பணியிடங்கள் நிரப்புவதற்கா இரண்டாம் நிலை ஜெயில் வார்டன் மற்றும் தீயணைப்பு வீரர் ஆகிய நிலைகளில் பணியாளர்கள் தேர்வு செய்யபடுவார்கள். இந்த தேர்வினை எழுத பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும், அதுமட்டுமின்றி விண்ணப்பதாரர் பத்தாம் வகுப்பில் தமிழை ஒரு மொழிப் பாடமாக படித்திருக்க வேண்டும்.

மேலும் இந்த தேர்விற்கு கடந்த ஆண்டு ஜூலை மாதம் 7 ஆம் தேதி தான் விண்ணப்பம் தொடங்கியது. அதற்கான விண்ணப்பம் கடந்த ஆகஸ்ட் 15 தேதி முடிவடைந்தது. இந்த தேர்வு கடந்த 2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் தேதி நடைபெற்றது.

இந்த தேர்வுக்கான முடிவுகள் கடந்த டிசம்பர் மாதம் 26 ஆம் தேதி வெளியானது.அதனை தொடர்ந்து சீருடை பணியாளர் எழுத்து தேர்வில் தேர்வானவர்களுக்கு இன்று உடற்தகுதி தேர்வு நடைபெறுகின்றது. மேலும் கடலூரில் 876, திருச்சியில் 400 பேருக்கு உடற்தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு நடைபெறுகின்றது.