தடுப்பூசி போடுபவர்கள் கவனத்திற்கு! கட்டாயம் இந்த உணவை தவிருங்கள்!
கொரோனா தொற்றானது பெருவாரியாக அனைத்து நாடுகளிலும் அதிக அளவு தாக்கத்தை கொடுத்துள்ளது. அந்தவகையில் இந்தியாவிற்கும் முதல் அலையில் அதிக அளவு தாக்கம் இல்லை என்றாலும் இரண்டாம் அலையில் அதன் தாக்கம் அளவிட முடியாததாகும். ஏனென்றால் முதல் அலையில் கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டது. அதனால் தொற்று பாதிப்பு அதிக அளவு காணப்படவில்லை. இரண்டாம் அலையி வரும் வரையிலும் தடுப்பூசி நடைமுறைக்கு வரவில்லை. அதனால் லட்சகணக்கான மக்கள் உயிரை இழக்கும் அபாயம் ஏற்பட்டது. அது மட்டுமின்றி இரண்டாம் அலையின் தீவிரத்தின் போது தான் இந்தியாவில் தடுப்பூசி நடைமுறைக்கு வந்தது.
அவ்வாறு வந்த தடுப்பூசியும் மக்களுக்குப் போதுமானதாக இல்லை. முதலில் அதிக அளவு பற்றாக்குறையாகவே காணப்பட்டது. இந்தக் காரணத்தினாலும் மக்களின் உயிர் இழக்க நேரிட்டது. இப்பொழுது தடுப்பூசி இந்தியாவில் போதுமான அளவிற்கு உள்ளது. 60 சதவீதத்திற்கும் மேல் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொண்டுள்ளனர். அவ்வாறு தடுப்பூசி செலுத்தி கொண்ட மக்களும் செலுத்த நினைக்கும் மக்களுக்கும் பல கேள்விகள் எழுகிறது. தடுப்பூசி செலுத்துவதற்கு முன் எந்த உணவுகளை உண்ண வேண்டும்? தடுப்பூசி செலுத்தியதற்குப் பின் இந்த உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்றெல்லாம் மக்களுக்கு பல கேள்விகள் எழுகிறது.
அவற்றை விளக்கும் வகையில் உணவு பழக்கங்கள் பற்றிப்மருத்துவர் கூறியுள்ளார். அதாவது தடுப்பூசி செலுத்துவதற்கு மூன்று நாட்கள் முன்பு வரை மது எடுத்துக் கொள்வதைத் தவிர்ப்பது நல்லது. அதேபோல தடுப்பூசி செலுத்துவதற்கு பின் மூன்று நாட்களுக்கு மது அருந்துவதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார். அதேபோல தடுப்பூசி செலுத்தும் அன்று தண்ணீர் தினசரி எடுக்கும் அளவை விட அதிகமாக குடிப்பது நல்லது என்று கூறியுள்ளார். அதேபோல தடுப்பூசி செலுத்திய பிறகு நீர் சம்பந்தம் உள்ள காய்கறிகள், பழங்கள் ,பருப்புவகைகள் ,மீன் போன்றவை எடுத்துக் கொள்வது மிகச் சிறந்தது என்று கூறியுள்ளார்.
ஊட்டச்சத்து உள்ள பொருள்களை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.அதேபோல தடுப்பூசி செலுத்திய பிறகு மைதாவால் செய்யப்படும் பொருள்களை உட்கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.அதேபோல எந்த உணவும் உண்ணாமல் தடுப்பூசி செலுத்தக் கூடாது என்று தெரிவித்துள்ளார்.மேலும் தடுப்பூசி செலுத்திய பிறகு ஒரு நாள் ஆவது ஓய்வு எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.