உடல் எடையை கட்டுப்பாட்டில் வைத்துக் கொள்ள தினமும் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டியது முக்கியம்.இந்த காலத்தில் உடல் மற்றும் மன ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி அவசியமானதாக இருக்கின்றது.
நடைபயிற்சி மேற்கொள்வதால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள்:
1)உடல் எடையை கட்டுப்பாட்டில் வைக்க நடைபயிற்சி உதவுகிறது.உடலிலுள்ள அதிகப்படியான கலோரிகளை எரிக்க நடைபயிற்சி அவசியமாகும்.
2)வாழ்நாள் முழுவதும் உடல் பருமனை சந்திக்காமல் இருக்க நடைபயிற்சி அவசியமாகிறது.இதய ஆரோக்கியத்தை மேம்படுத்த நடைபயிற்சி செய்யலாம்.
3)கால் வலிமையை அதிகரிக்க தினமும் நடைபயிற்சி மேற்கொள்ளலாம்.நடைபயிற்சி செய்வதால் பக்கவாதம்,மனச்சோர்வு போன்ற பாதிப்புகளில் இருந்து மீளலாம்.
தினமும் பெரியவர்கள் பத்தாயிரம் காலடிகள் எடுத்து வைக்க வேண்டுமென்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.20 முதல் 40 வயதிற்கு உட்பட்டவர்கள் தினமும் 12,000 காலடிகள் நடக்க வேண்டும்.40 வயதை கடந்தவர்கள் தினமும் 11,000 காலடிகள் எடுத்து வைக்க வேண்டும்.60 வயதை கடந்தவர்கள் தினமும் 10,000 காலடிகள் நடக்க வேண்டும்.
சர்க்கரை நோய்,இரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருப்பவர்கள் தினமும் குறைந்தபட்சம் 12,000 காலடிகள் நடக்க வேண்டும்.தினமும் காலை நேரத்தில் 30 நிமிடங்கள் மற்றும் மாலை நேரத்தில் 30 நிமிடங்கள் நடைபயிற்சி மேற்கொள்ள வேண்டும்.
சர்க்கரை நோயாளிகள் தினமும் ஒரு மணி நேரம் வரை நடந்தால் 150 மில்லி கிராம் சர்க்கரை அளவு குறையும்.தினமும் நடைபயிற்சி மேற்கொண்டால் இதய தசைகள் வலிமை அதிகரிக்கும்.ஆனால் உணவு உட்கொண்ட பிறகு நடைபயிற்சி மேற்கொள்வதை தவிர்க்க வேண்டும்.
வாக்கிங் செல்ல முடியாதவர்கள் வீட்டு மாடியில் சிறிது நேரம் நடைபயிற்சி செய்யலாம்.தினமும் வெறுங்களில் நடந்தால் கால் பாத ஆரோக்கியம் மேம்படும்.