இன்றைய பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

0
180

இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொருத்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றங்களை செய்து வருகின்றன. அந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை நாள்தோறும் நிர்ணயிக்கும் நடைமுறையானது எண்ணெய் நிறுவனங்களால் கடைபிடிக்கப்பட்டு வருகின்றன.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்களாக இருக்கும் பாரத் பெட்ரோலியம் மற்றும் இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில், உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்கின்றன. நோய்த்தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக, கடந்த மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்து வந்தது. இந்த சூழ்நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றன.

ஆனால் தலைநகர் சென்னையில் இரண்டு வாரங்களை கடந்து பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் தற்சமயம் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் விலை 102 ரூபாய் 49 காசுக்கும், டீசல் விலை 24 ரூபாய் 39 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Previous article5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை!
Next articleதமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்தில் இந்த 5 மாவட்டங்களில் மழை!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here