5 மாவட்டங்களில் வெளுத்து வாங்க காத்திருக்கும் கனமழை!

0
202

தமிழ்நாட்டில் இன்றைய தினம் கோவை, உதகை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் தமிழக வட கடலோர மாவட்டங்கள் அதோடு புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை சேர்ந்திருக்கிறது.

நாளைய தினம் தென்மேற்கு பருவக்காற்று மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, தமிழ்நாட்டில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டி இருக்கின்ற திண்டுக்கல், தென்காசி, தேனி, கோவை, உதகை உள்ளிட்ட மாவட்டங்களில் ஒரு சில பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. அதோடு கடலோர மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. மற்ற இடங்களில் வறண்ட வானிலையே நிலவும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

சென்னையை பொறுத்த வரையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸ் ஆக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

Previous articleதமிழகத்தில் பள்ளிகள் திறப்பு!! அமைச்சர் வெளியிட்ட அதிரடி தகவல்!!
Next articleஇன்றைய பெட்ரோல் டீசல் விலை! மகிழ்ச்சியில் வாகன ஓட்டிகள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here