நாளை மறுநாள் உடன் முடிவடையும் ஊரடங்கு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்!

0
69

இந்தியாவில் கடந்த 2019ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் பரவத் தொடங்கிய நோய் பரவல் தற்போது வரையில் இந்தியாவை விட்டு முழுமையாக அகலவில்லை. இதன் காரணமாக, மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது.இதனைத்தொடர்ந்து நோய்த்தொற்று பரவல் மெல்ல, மெல்ல, குறையத் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து ஊரடங்கு பல தலைவர்களை மத்திய ,மாநில அரசுகள் வெளியிட்டிருந்தது. மெல்ல, மெல்ல குறைந்து வந்த நோய் தொற்று பரவல் தற்போது மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது.

அதாவது சென்னை போன்ற ஒரு சில மாவட்டங்களில் நோய் தொற்று பரவல் மீண்டும் அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. நோய் பரவலை கட்டுப்படுத்துவதற்காக தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை மீண்டும் அறிவித்து வருகிறது.தமிழ்நாட்டில் தற்சமயம் அமலில் இருந்துவரும் ஊரடங்கு நாளை மறுநாள் முடிவடைய இருக்கிறது. தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரிகள், திரையரங்குகள், போன்றவை திறப்பதற்கு இதுவரையில் அனுமதி கொடுக்கப்படவில்லை. அதிலும் குறிப்பாக பள்ளி மற்றும் கல்லூரிகளை எப்போது திறக்கலாம் என்று எந்தவிதமான அறிவிப்பும் மத்திய, மாநில அரசு தரப்புகளில் இருந்து வெளியாகவில்லை. இதனால் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இந்த சூழ்நிலையில், ஊரடங்கு நீட்டிப்பு மற்றும் தளர்வுகள் தொடர்பான அறிவிப்பு குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் இன்று காலை 11 மணி அளவில் முதல் அமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற இருக்கிறது. இந்தக் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு மற்றும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்க இருக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நோய்த் தொற்று அதிகமாக இருக்கின்ற மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்துவதற்கான உத்தரவை வெளியிட்டு இருக்கின்ற நிலையில், இது குறித்து எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பாக ஆலோசனை மேற்கொள்ளப்பட இருக்கிறது செப்டம்பர் மாதம் ஒன்றாம் தேதியிலிருந்து 9 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் செயல்பட இருக்கிறது. பள்ளிகளை திறப்பதற்காக மேற்கொள்ள பட வேண்டிய நடவடிக்கைகள் கடைபிடிக்க வேண்டிய கட்டுப்பாடுகள் பள்ளிகள் தற்சமயம் திறக்கப்படுவது பாதுகாப்பாக இருக்குமா? என்பது தொடர்பாக இதில் ஆலோசிக்கப்படுகிறது.

திரையரங்குகளை திறப்பதற்காக அனுமதி வழங்க வேண்டும் என்று திரையரங்கு உரிமையாளர்கள் வேண்டுகோள் வைத்து வந்தார்கள் இதுதொடர்பாக இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டு முடிவு அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.