பெட்ரோல் டீசல் விலை! எண்ணெய் நிறுவனங்களால் மகிழ்ச்சியில் திளைக்கும் வாகன ஓட்டிகள்!

0
243

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை பொறுத்த வரையில் இந்தியாவில் சர்வதேச சந்தையில் நிலவி வரும் கச்சா எண்ணெயின் விலை நிலவரத்தை பொறுத்து நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த விதத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நிர்ணயிக்கும் நடைமுறையை என்னை நிறுவனங்கள் கடைபிடித்து வருகிறது.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் ஆக இருந்துவரும் பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம், இந்தியன் ஆயில் உள்ளிட்ட எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. நோய்த்தொற்று காரணமாக, சென்ற மார்ச் மாதம் முதல் மே மாதம் வரையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் எந்தவிதமான மாற்றமும் செய்யப்படாமல் இருந்தது. இந்த நிலையில், ஜூன் மாதம் முதல் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் அதிகப்படுத்தி வருகின்றன.

இந்த சூழ்நிலையில். சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் இன்று மாற்றம் எதுவும் செய்யப்படவில்லை. ஒரு லிட்டர் பெட்ரோலின் விலை 99 ரூபாய் 47 காசுக்கும், டீசல் விலை 93 ரூபாய் 34 காசுக்கும், விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Previous articleநாளை மறுநாள் உடன் முடிவடையும் ஊரடங்கு! இன்று முக்கிய ஆலோசனையில் ஈடுபடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
Next articleபாகிஸ்தான் பொறுப்பான ஆட்டம்! முதல் நாள் இறுதியில் 212 ரன்கள்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here