ஜெயிலர் படம் ரிலீஸ் முன்னிட்டு ஆகஸ்ட் 10 விடுமுறை!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

0
132
August 10 is a holiday for the release of Jailer!! A private company that announced action!!
August 10 is a holiday for the release of Jailer!! A private company that announced action!!

ஜெயிலர் படம் ரிலீஸ் முன்னிட்டு ஆகஸ்ட் 10 விடுமுறை!! மகிழ்ச்சியில் ஊழியர்கள்!!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக இருப்பவர் தான் நடிகர் ரஜினிகாந்த் அவர்கள். இவர் ரசிகர்களால் சூப்பர் ஸ்டார் என்று அன்பாக அழைக்கப்படுவார்.இவர் தொடக்க காலத்தில்  பெங்களூர் போக்குவரத்து கலகத்தில் நடத்துனராக வேலை பார்த்து கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

அதன் பிறகு சென்னை திரைப்பட கல்லூரியில் படிப்பை முடித்த ரஜினிகாந்த் அபூர்வ ராகங்கள் என்னும் படத்தின் மூலம் அறிமுகமானார்.நடிக்க தொடங்கிய காலத்தில் இருந்தே இன்று முதல் அவர் ஹீரோவாகவே தனது நடிப்பை தொடருகிறார்.

இன்று அவருக்கு போட்டியாக எதனை இளம் ஹீரோக்கள் வந்தாலும்  அவர் தனது நடிப்பு திறமையால் எப்பொழுதும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாகவே திகழ்கிறார்.

இவர் நடிப்பில் இறுதியாக வெளிவந்த படம் அண்ணாத்த இந்த படம் பெரிய அளவில் பேசப்படவில்லை என்றாலும் ரஜினியின் நடிப்பிற்காகவே பலராலும் பார்க்கப்பட்டது. இதன்பின்பு ரஜினி கோலமாவு கோக்கிலா,பீஸ்ட் போன்ற படங்களை இயக்கிய நெல்சன் திலீப்குமார் அவர் இயக்கத்தில் ஜெயிலர் படத்தில்  நடித்து வருகின்றார்.

மேலும் இந்த படத்தில் ரம்யா கிருஷ்ணன் ,தமன்னா ,யோகி பாபு உள்ளிட்ட பல நட்சத்திர பட்டாளங்கள் இணைத்து நடித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்த படத்தில் வில்லனாக கன்னட சூப்பர் ஸ்டாரானா ஷிவ ராஜ்குமார் சிறப்பு கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னை நேரு  உள்விளையாட்டு அரங்கில் ஜூலை 28ம் தேதி விமர்சையாக நடைபெற்றது.

இதனை தொடர்ந்து படத்தின் ட்ரெயிலர் கடந்த 2 ஆம் தேதி வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.இதனால் ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை இன்னும் அதிகரித்தது.

இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் விறுவிறுப்பாக நடக்கும் பட்சத்தில் ஜெயிலர் படம் ஆகஸ்ட் 10 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று படக்குழு கூறியுள்ளது.

இந்த நிலையில் படத்தின் ஆகஸ்ட் 10 ஆம் தேதி  ஜெயிலர் படத்தின் ரிலிஸ் முன்னிட்டு சென்னை மற்றும் பெங்களூரில்  செயல்பட்டு வரும் நிறுவனமான யுனோ அகுவா என்ற தனியார் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு விடுமுறை அளிப்பதாக கூறியுள்ளது.மேலும் தனது ஊழியர்களுக்கு ஜெயிலர் படத்திற்கான இலவச டிக்கெட்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

Previous articleரூ.1000 பெறுவது குறித்த குறுஞ்செய்தி! தமிழக அரசு சொன்ன தகவல்!!
Next articleதங்கம் வாங்குபவர் கவனத்திற்கு!! 3 நாட்களாக தொடர்ந்து ஒரே விலையில் தங்கம் விற்பனை!!