நேற்று நடந்து முடிந்த இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி படு தோல்வியை சந்தித்தது. இதில் ஆஸ்திரேலியா அணி இரண்டாவது வெற்றியை பதிவு செய்தது. இந்த 4 வது போட்டியில் ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் அவரது சைகை மூலம் ஒட்டுமொத்த இந்தியாவையே அசிங்க படுத்தி உள்ளார்.
இந்தியா தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ள நிலையில் 3 போட்டிகள் நடந்து முடிந்த நிலையில் இரு அணிகளும் தலா ஒரு போட்டிகளில் வென்று ஒரு போட்டியை சமன் செய்து 4 வது போட்டியில் களமிறங்கியது. இதில் இந்திய அணி தோல்வியடைந்தது. மேலும் இதில் இரண்டாவது இன்னிங்ஸில் களமிறங்கிய ரிஷப் பண்ட் விக்கெட்டின் போது ஆஸி வீரர் டிராவிஸ் ஹெட் சைகை ஒன்றை செய்துள்ளார்.
இந்த சைகையானது மிகவும் வெறுக்கத்தக்க வகையில் இருந்துள்ளது. இந்த சைகையின் மூலம் இந்திய அணியை மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த இந்தியாவையே அசிங்க படுத்தியுள்ளார். இதனால் இந்தியா முழுவதும் உள்ள கிரிக்கெட் ரசிகர்கள் மட்டுமல்லாமல் வீரர்கள் என பலரும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். மேலும் இதற்கு ஐசிசி ஹெட் மீது என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என கடுமையான கேள்விகளை முன் வைத்து வருகின்றனர். அவர் சைகை குறித்து உங்களின் கருத்து என்ன??