மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு!

Photo of author

By Jayachandiran

மிரள வைக்கும் காட்டுத்தீயால் பொதுமக்கள் அச்சம்! ஆஸ்திரேலியாவில் அவசர நிலை அறிவிப்பு!

பருவ காலநிலையின் காரணமாக ஏற்பட்ட ஆஸ்திரேலிய காட்டுத்தீ தற்போது மக்கள் வசிக்கும் இடத்தை நெருங்கும் காரணத்தால் பொது மக்களின் பாதுகாப்பு நலன் கருதி முக்கிய நகரத்தில் அவசர நிலை அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களாகவே தொடர்ந்து வரும் இந்த காட்டுத்தீயினால் பல மில்லியன் உயிர் இறந்துள்ளது. லட்சக் கணக்கான சதுர கிலோமீட்டர் காடுகள் எரிந்து சாம்பலாகியுள்ளன

வெப்பம் கலந்த காற்றின் வேகம் அதிகரித்து ஆஸ்திரேலியாவின் தலைநகரான கான்பெரா என்னும் இடத்தை காட்டுத்தீ நெருங்கி வரும் காரணத்தால் அந்நகரத்தில் அவரச நிலை அறிவிக்கப்பட்டுள்ளது. வேகமாக வீசும் காற்றின் மூலம் புகை மண்டலம் சூழ்ந்து மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது. இதுவரை கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு பரவிய காட்டுத்தீயினால் அடர்ந்த வனப்பகுதிகளும், புதர்களும் எரிந்து பல்வேறு பகுதிகளில் புகை மண்டலம் சூழ்ந்துள்ளது.

இந்த காட்டுத்தீ விபத்தில் பலியானோரின் எண்ணிக்கை 33 பேரும், லட்சக் கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீயில் எரிந்து நாசமாகியுள்ளன. இந்த விபத்தினால் பல மில்லியன் ஆஸ்திரேலிய உயிரினங்கள் இறந்துள்ளன. வெப்பத்தின் தாக்கம் குறைந்து காட்டுத்தீயின் கோர தாண்டவத்திற்கு ஒரு நல்ல முடிவு வர வேண்டும் என்பதே பலரின் எதிர்பார்ப்பாக உள்ளது.