கனடாவைத் தொடர்ந்து வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக முடிவெடுத்த ஆஸ்திரேலியா!!

Photo of author

By Gayathri

என்னடா அரசு ஏற்கனவே ஸ்டுடென்ட்ஸ் விசாவில் பல மாற்றங்களை கொண்டு வந்த நிலையில், தற்பொழுது ஆஸ்திரேலியாவும் அதே போன்று வெளிநாடுகளில் இருந்து ஆஸ்திரேலியா வந்து படிக்கக்கூடிய மாணவர்களுக்கு சில வழிமுறைகளை உண்டாக்கியுள்ளது.

இவை மாணவர்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தினாலும் ஆஸ்திரேலியா நாட்டில் உள்ள பல்கலைக்கழகங்கள் இடையே வரவேற்பை பெறுவதாகவே உள்ளது.

மேலும் ஆஸ்திரேலியா அரசானது, அந்த நாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு கடினமான ஆங்கில மொழித் தேர்வை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் பின்னணியை சரிபார்க்கும் பணிகளையும் தீவிரப்படுத்தியுள்ளது. கூடுதலாக, விசா கட்டணத்தை ஆஸ்திரேலியா இரண்டு மடங்கு அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உள் மற்றும் வெளிநாட்டு மாணவர்களை தண்டிக்கும் வகையில் அமைந்திருக்கும் இந்த திட்டம் குறித்து முறையாக எங்களிடம் ஆலோசிக்கவில்லை என்றும், இதனை நடைமுறைப்படுத்தினால் பொருளாதாரம் பாதிப்பிற்குள்ளாகும் என்றும், விருந்தோம்பலைக் கொண்ட நாடாக ஆஸ்திரேலியா இருக்காது என்ற செய்தியையே இந்த அறிவிப்பு கடத்துகிறது என்று கூறுகிறார், ஆஸ்திரேலியாவின் தலைசிறந்த பல்கலைக்கழங்களுக்கான குழுவான, க்ரூப் ஆஃப் 8′-ன் துணை செயற்தலைவர் மேத்யூ ப்ரவுன்.

சிட்னி பல்கலைக்கழகத்தில் 40% வருவாயை ஈட்டித் தருபவர்கள் வெளிநாட்டில் இருந்து ஆஸ்திரேலியாவுக்கு படிக்க வரும் மாணவர்கள் தான் என்பது முக்கிய தகவலாக உள்ளது.

இது குறித்து, கல்வி அமைச்சர் ஜேசன் கிளேர் கூறுகையில் :-

“ஒவ்வொரு உயர்கல்வி நிறுவனத்திற்கும் தனித்தனி வரம்பு வழங்கப்படும். தொழிற்கல்வி மற்றும் பயிற்சித்திட்டங்களை வழங்கும் நிறுவனங்கள் அதிக இழப்பை சந்திக்கலாம். தலைநகரங்களில் உள்ள பல்கலைக்கழங்களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருக்கும்,” என்று தெரிவித்தார்.

ஆனால் இது குறித்த அரசாங்கம் கூறுகையில், இந்தக் கொள்கை மாணவர்களை நெரிசலான பெரிய நகரங்களில் உள்ள பல்கலைக்கழங்களுக்குப் பதிலாக, இரண்டாம் கட்ட நகரங்களில் இயங்கும் பல்கலைக்கழகங்களுக்குத் மடைமாற்றம் செய்யும் என்று அரசாங்கம் தெரிவிக்கிறது.

மேலும் இந்த முடிவுகள் எடுப்பதற்கு முக்கிய காரணமாக ஆஸ்திரேலியா அரசாங்கம் கூறுவது, இந்த மாற்றங்கள் வருங்கால மாணவர்களை “நெறியற்ற” கல்வி நிறுவனங்களில் இருந்து பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன என்று அரசு கூறுகிறது. சிலர் போதிய மொழித் திறன் அல்லது கல்வி தகுதி இல்லாத மாணவர்களையும், படிப்பிற்குப் பதிலாக வேலை செய்ய விரும்பும் நபர்களையும் சில கல்வி நிறுவனங்கள் சேர்ப்பதாகவும் குற்றம் சாட்டுகிறது அரசாங்கம்.

சர்வதேச கல்வி மிகவும் முக்கியமானது. இந்த சீர்திருத்தங்கள் அதை சிறந்ததாக மாற்றும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அது முன்னேறிச் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று அந்நாட்டு கல்வி அமைச்சர் கூறியிருக்கிறார்.