இந்திய கேப்டனை பலவீனப்படுத்தும் ஆஸ்திரேலியா!! முத்தையா முரளிதரனை தொடர்ந்து பும்ரா!!

Photo of author

By Vijay

cricket: இந்திய அணியின் கேப்டன் பும்ரா பந்து வீச்சு சரியானதா? அவரை தடை செய்ய வேண்டும் என்று ஆஸ்திரேலியா ரசிகர்கள் விமர்சனம்.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலிய அணியுடன் விளையாடி வரும் டெஸ்ட் தொடரில் முதல் போட்டியில் விளையாடி முடித்தது. இந்த போட்டியில் இந்திய அணியின் அபார வெற்றிக்கு காரணமாக பும்ரா முக்கிய வீரராக இருந்தார். இந்நிலையில் இவரை பலவீனப்படுத்த ஆஸ்திரேலியா மீடியா முயற்சி செய்து வருகிறது.

இந்திய அணி தற்போது ஆஸ்திரேலியா சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இந்த தொடரின் முதல் போட்டியானது பெர்த் மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் களமிறங்கியது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 150 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 487 ரன்கள் அடித்து டிக்ளேர் செய்தது.

இதன் மூலம் இந்திய அணி 295 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு காரணமாக இந்திய அணியின் தொடக்க வீரர்கள் ஜெய்ஷ்வால் மற்றும் கே எல் ராகுல், விராட் கோலி அபாரமாக ஆடினார். மறுபக்கம் பவுலிங் ல் 8 விக்கெட்டுகளை எடுத்து இந்திய அணியின் வெற்றியை எளிதாக்கினார் கேப்டன் ஜஸ்ப்ரித் பும்ரா.

இந்த போட்டிக்கு பிறகு ஆஸ்திரேலிய ரசிகர்கள் மற்றும் மீடியாக்களும் அவரின் பவுலிங் ஆக்சன் சரியானது அல்ல அவரை தடை செய்ய வேண்டும் என்றும் கூறி வருகின்றனர். இதற்கு முன் முத்தையா முரளிதரன் இதுபோன்ற பவுலிங் ஆக்சன் தவறானது என்ற சர்ச்சை கிளம்பியது. தற்போது பும்ரா வை விமர்சனம் செய்து வருகின்றனர். இது அவரின் மன உறுதியை பலவீனப்படுத்த முயற்சிப்பதாகவும் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.