இந்திய அணியை காலி செய்த ஆஸ்திரேலியா!! சதம் அடித்தும் தலை குனிந்த மந்தனா!!

Photo of author

By Vijay

cricket: இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவுடன் மோதிய 3 போட்டிகளிலும் படுதோல்வியை சந்தித்தது .

இந்திய மகளிர் அணி ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 ஒருநாள் தொடர் போட்டியில் விளையாடியது. இந்த தொடரில் இந்திய மகளிர் அணி 3 போட்டிகளிலும் தோல்வியை சந்தித்துள்ளது. ஸ்மிருதி மந்தனா விளாசிய சதம் வீண்.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்து களமிறங்கியது. முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா மகளிர் அணி 50 ஓவர் முடிவில் 298 ரன்கள் எடுத்து 6 விக்கெட்டுகளை இழந்திருந்தது.ஆஸ்திரேலியா அணி வீராங்கனை அன்னாபெல் சதர்லேண்ட் சதம் விளாசினார், தஹ்லியா மெக்ரத் 56 ரன்களும், ஆஷ்லே கார்ட்னர் 50 ரன்களும் எடுத்தனர். இந்திய அணியில் அருந்ததி ரெட்டி 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

தொடர்ந்து களமிறங்கிய இந்திய அணி தொடக்க வீராங்கனை ஸ்மிர்த்தி மந்தனா அபாரமாக விளையாடி சதம் விளாசினார் 109 பந்துகளில் 105 ரன்கள் அடித்தார். ஹர்லீன் டியோல் 39 ரன்கள் அடித்தார். அடுத்தடுத்து களமிறங்கிய வீராங்கனைகள் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க  45 .1 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 215 ரன்கள் மட்டுமே எடுத்தது.

இதனால் இந்த தொடரில் ஒயிட் வாஷ் தோல்வியை தழுவியது இந்திய மகளிர் அணி. முதல் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இரண்டாவது ஆட்டத்தில்   ஆஸ்திரேலியா 122 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. மூன்றாவது போட்டியில் 83 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்றியது.