இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!!

0
262
#image_title

இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய வீரர் கருத்து!

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்திய அணியுடன் மோதுவது குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் கருத்து தெரிவித்துள்ளார்.

வரும் ஜூன் 7ம் தெதி ஐசிசி நடத்தும் உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி தொடங்கவுள்ளது. இந்த  போட்டி ஜூன் 11ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்த ஆண்டு நடைபெறும் ஐசிசி உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றது. இந்த போட்டி லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெறவுள்ளது.

கடந்த ஆண்டு நடந்த முதல் ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியும் விராட் கோலி தலைமையிலான இந்திய அணியும் விளையாடியது. இதில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்று ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் கோப்பையை கைப்பற்றியது. இதையடுத்து இரண்டாவது முறையாக ஐசிசி டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் விளையாடவுள்ள இந்திய அணி கோப்பையை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர். இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் அவர்கள் இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் விளையாடுவது உற்சாகத்தை  கொடுக்கின்றது” என கருத்து தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சேம்பியன்ஷிப் இறுதிப் போட்டி குறித்து ஆஸ்திரேலாய அணியின் முன்னணி பேட்ஸ்மேன் ஸ்டீவன் ஸ்மித் அவர்கள் ” டெஸ்ட் போட்டி நடைபெறும் ஓவல் மைதானத்தில் போக போக மாற்றம் ஏற்பட்டு சுழற்பந்து வீச்சுக்கு சாதகமாக அமைய வாய்ப்புள்ளது. இந்தியாவில் நாங்கள் எந்த மாதிரியான சவாலை எதிர் கொண்டோமோ அது மாதிரியான சவாலை இங்கு நாங்கள் சந்திக்க நேரிடலாம். மொத்தத்தில் கிரிக்கெட் விளையாடுவதற்கு ஓவல் மைதானம் அற்புதமான இடம். இந்த மைதானத்தில் வேகப் பந்து வீச்சுக்கு பவுன்ஸும் சாதகமாக இருக்கும்” என்று கூறியுள்ளார்.

மேலும் ஸ்டீவன் ஸ்மித் அவர்கள் இந்திய அணியுடன் விளையாடுவது பற்றி “இறுதிப் போட்டியில் இந்தியாவுடன் மோதுவது உற்சாகம் அளிக்கின்றது. இந்த போட்டியை காண அதிக எண்ணிக்கையில் ரசிகர்கள் திரள்வார்கள். அனேகமாக ஆஸ்திரேலியாவை விட இந்திய ரசிகர்கள்தான் அதிகளவு வருவார்கள். இது சிறப்புமிக்க அதே சமயம் ஜாலியான போட்டியாக இருக்கப் போகிறது. அந்த போட்டியை நாங்கள் ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளோம்” என்று கூறியுள்ளார்.

Previous articleதமிழ்நாடு பிரீமியர் லீக் 7வது சீசன்! ஜூன் 12ம் தேதி வெளியாகும் என அறிவிப்பு!!
Next articleவிவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!!