விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!!

விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்.. கொடுத்த உடனே கையில் பணம்!! இன்று முதல் புதிய திட்டம் அமல்!!

தமிழக அரசு சமீப காலமாக ரேஷன் கடை பயனாளிகள் என தொடங்கி விவசாயிகள் வரை அனைவரும் பயன்பெறும் வகையில் பல புதிய திட்டங்களை அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில் ரேஷன் கடையில் மக்கள் பொருட்களை வாங்க பயோமெட்ரிக் முறையை கொண்டு வந்தது.

நாளடைவில் இது தொடர்பாக தொழில்நுட்பக் கோளாறுகள் ஏற்பட்டாலும் அதற்கு ஏற்றார் போல் அடுத்த கட்டத்திற்கு நகர்ந்து கியூ ஆர் கோட் ஸ்கேனிங் முறையை கொண்டு வந்தது. இது அனைத்துமே உரிய மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்டங்களும் கிடைக்க வேண்டும் என்பதற்காகத்தான்.

அதேபோல தற்பொழுது பயோ மெட்ரிக் முறையை நெல் கொள்முதல் நிலையங்களிலும் தமிழக அரசு கொண்டு வந்துள்ளது. பல்வேறு நெல் கொள்முதல் நிலையங்களில் வியாபாரிகள் வந்து நெல்களை விற்று விடுவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைகின்றனர். இதனை தடுக்க தற்பொழுது பயோ மெட்ரிக் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.

இதன் அடிப்படையில் வியாபாரிகள் நேரடி நெல் கொள்முதல் செய்யப்படுவது தடுக்கப்படும். விவசாயிகள் மட்டுமே நெல் கொள்முதல் செய்ய இது ஏற்றவாறு இருக்கும். அதுமட்டுமின்றி விவசாயிகள் நெல் கொள்முதல் செய்த உடனே அதற்கு உரித்தான பணத்தை உடனடியாக தர வேண்டும் என்று கூறியுள்ளனர்.

மேற்கொண்டு பணம் தராமல் இருப்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்துள்ளனர். விவசாயிகளின் குறைகளை ஏற்று இவ்வாறு தமிழக அரசு கொண்டுவந்துள்ள இந்த திட்டம் பயனடையுமா என்று பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.