இந்திய அணி அறிமுக வேகப்பந்து வீச்சாளரான ஹர்ஷித் ராணா ஆஸ்திரேலிய அணியின் டெஸ்ட் கிரிக்கெட்டின் ஜாம்பவான் மார்னஸ் லபுசானேவை சீண்டுவது போல் வம்புக்கு இழுத்துள்ளார்.
இந்திய அணி நியூசிலாந்து அணியின் படு தோல்விக்கு பின் ஆஸ்திரேலிய அணியுடனான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இந்நிலையில் இந்த தொடரின் முதல் போட்டி இன்று காலை பெர்த் மைதானத்தில் தொடங்கியது. இந்த போட்டியில் முதலில் இந்திய அணி பேட்டிங் செய்தது.
முதல் இன்னிங்ஸில் இந்திய அணி 150 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. அடுத்ததாக ஆஸ்திரேலியா அணி களமிறங்கியது. இதில் இந்திய இளம் வீரர் ஹர்ஷித் ராணா அறிமுக வீரர். இவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல் ஓவரை வீச வந்தார்.
இவர் ஆட்டத்தில் 8 வது ஓவரை வீச வந்தார் அப்போது 5வது பதினை வீச வரும் போது பந்தை வீசி விடு அருகில் சென்று பேசி சீண்டினார் அதற்கு அவர் முத்தம் கொடுப்பது போல் சைகை செய்து சிரித்து கொண்டே சென்றார். ஹர்ஷித் ராணா ipl போட்டிகளில் இதுபோன்று செய்துள்ளார். ஆஸ்திரேலிய அணி தற்போது 67 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்துள்ளது. ஜஸ்ப்ரித் பும்ரா 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.