படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

படைகளை வெல்லலாம் மக்களின் மனதை வெல்ல முடியாது! ஜோ பைடன் ரஷ்யாவிற்கு எச்சரிக்கை!

ரஷ்யா மற்றும் உக்ரைன் இடையே போர் மிகவும் ஆக்ரோஷமாக நடைபெற்று வருகிறது இதனால் உக்ரைனிலிருக்கும் அவர்களை உடனடியாக வெளியேறும படி அமெரிக்கா முன்பு அறிவித்திருந்தது. மேலும் நேற்று முன்தினம் உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே போலந்து நாட்டில் அமைதிப் பேச்சுவார்த்தை நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் சுமுகமான தீர்வு எட்டப்படாததால் ஏற்கனவே நடைபெற்றுக்கொண்டிருந்த போர் தற்போது தீவிரமடைய தொடங்கியிருக்கிறது. ராணுவ நிலைகள் மீது மட்டுமே தாக்குதல் நடத்தப்படும் என்று தெரிவித்த ரஷ்யா தற்சமயம் பொதுமக்களையும் தாக்கத் தொடங்கியிருக்கிறது. உக்ரேனில் … Read more

பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! மாணவர்களே தயாராகுங்கள்!

பொதுத் தேர்வுகளுக்கான அட்டவணையை வெளியிட்டார் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர்! மாணவர்களே தயாராகுங்கள்!

கடந்த 2 ஆண்டு காலமாக நோய்த்தொற்று காரணமாக, பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் சரிவர செயல்படாததால் மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றவர்களாக அறிவிக்கப்பட்டார்கள். இந்தநிலையில், இந்த வருடம் நோய் தொற்று குறைய தொடங்கியதையடுத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் செயல்படத் தொடங்கினர். முதலில் இணையதளம் மூலமாக வகுப்புகள் நடைபெற்று வந்த நிலையில், கடந்த செப்டம்பர் மாதம் முதல் படிப்படியாக பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டு நடத்தப்பட்டு வந்தன. இந்த நிலையில், 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு … Read more

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூட்டுறவுத்துறை அமைச்சர்!

தமிழக மக்களுக்கு குட் நியூஸ் சொன்ன கூட்டுறவுத்துறை அமைச்சர்!

கடந்த தமிழக சட்டசபை பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை கைப்பற்றினால் தமிழக கூட்டுறவு சங்கங்களில் 5 பவுன் வரையில் நகை அடகு வைத்திருக்கும் விவசாயிகளின் கடன்கள் தள்ளுபடி செய்யப்படும் என்று அப்போது தற்போதைய முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். இப்படி 500க்கும் மேற்பட்ட வாக்குறுதிகளை வழங்கி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார் ஸ்டாலின்.ஆனால் தற்போது வரையில் எந்த ஒரு வாக்குறுதியும் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்று பலரும் ஆதங்கம் தெரிவித்து வருகிறார்கள். பெண்களுக்கான இலவச பயணத்திட்டம் உடனடியாக நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனாலும் … Read more

என் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தம்பதியர்கள்!

என் மகனை எப்படியாவது மீட்டுக் கொடுங்கள்! கண்ணீர் மல்க கோரிக்கை வைத்த தம்பதியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே ஆக்ரோஷமான போர் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக, உக்ரைன் மிகப்பெரிய சேதங்களை கண்டிருக்கிறது. உக்ரைன் நாட்டிற்குள் ரஷ்யா சுமார் 69 கிலோ மீட்டர் தொலைவிற்கு பிரம்மாண்ட அணிவகுப்பு நடத்தி தன்னுடைய ராணுவத்துடன் நுழைந்திருக்கிறது. இதற்கு நடுவில் நேற்று நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் உக்ரைனில் படித்துவந்த கர்நாடகத்தைச் சேர்ந்த நவீன் என்ற மாணவர் ரஷ்யப் படைகளால் கொல்லப்பட்டார். இதற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தியாவிலுள்ள உக்ரைன் மற்றும் ரஷ்ய தூதரகங்களுக்கு இந்திய அரசு … Read more

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

ஆப்ரேஷன் கங்கா! அடுத்தடுத்து சிறப்பு விமானங்கள் மூலமாக மீட்கப்படும் உக்ரைன் வாழ் இந்தியர்கள்!

உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையே உக்கிரமான போர் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சூழ்நிலையில், உக்ரைனில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மீட்கும் பணியை மத்திய அரசு துரிதப்படுத்தியிருக்கிறது. ஏற்கனவே கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆபரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் மூலமாக இந்தியர்கள் உக்ரைனின் எல்லை நாடுகளின் உதவியுடன் மீட்கப்பட்டு வருகிறார்கள். இந்த நிலையில், நேற்று முன்தினம் ரஷ்யா மற்றும் உக்ரைன் உள்ளிட்ட நாடுகளுக்கு இடையே போலந்து நாட்டில் நடைபெற்ற அமைதிப் பேச்சுவார்த்தையில் தீர்வு எட்டப்படவில்லை. அதையடுத்து நேற்று … Read more

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்! ரஷ்யா அதிர்ச்சி!

ஐரோப்பிய யூனியனில் இணைகிறது உக்ரைன்! ரஷ்யா அதிர்ச்சி!

ரஷ்யா, உக்ரைன் மீது ஆக்ரோஷமாக போர் தொடுத்து வருகிறது. இந்த போரானது 6வது நாளாக நீடித்து வருகிறது. இதன்காரணமாக, உக்ரைன் பெரிதாக பாதிக்கப்பட்டிருக்கிறது. அதோடு அந்த நாட்டிலிருக்கும் மற்ற நாட்டு மக்களை அந்தந்த நாடுகள் உடனடியாக காலி செய்யுமாறு வலியுறுத்தி வருகின்றன. இந்தியாவைப் பொறுத்தவரையில் உக்ரைனில் இந்தியர்கள் 20000 பேர் இருக்கிறார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடந்த 3 நாட்களாக தொடர்ந்து ஆப்ரேஷன் கங்கா என்ற பெயரில் விமானங்கள் அனுப்பப்பட்டு உக்ரைனின் அண்டை நாடுகளின் உதவியோடு இந்தியர்கள் … Read more

நோய்தொற்றுக்கு சாவுமணி அடிக்கும் வேப்பமரத்தின் சாறு!

நோய்தொற்றுக்கு சாவுமணி அடிக்கும் வேப்பமரத்தின் சாறு!

நோய்த்தொற்றை முற்றிலுமாக அழிப்பதற்கான மருந்துகள் தொடர்பாக இன்று வரையிலும் உலகளாவிய ஆராய்ச்சிகள் தொடர்ந்து கொண்டுதான் வருகிறது. உலகளாவிய புகழ் பெற்ற ஆக்ஸ்போர்டு உள்ளிட்ட பல்கலைக்கழகங்களும் இதற்கான முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். அதோடு மருத்துவ விஞ்ஞானிகள் பலரும் இது தொடர்பான ஆராய்ச்சிகளை முன்னெடுத்து வருகிறார்கள். அதோடு சித்த மருத்துவ முறையிலும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான மருந்துகள் இருக்கிறதா என்பதை கண்டுபிடிப்பதற்காக பல்வேறு ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகிறது. அறிவியல் சார்ந்த மருத்துவம் மட்டுமல்லாமல் இயற்கை சார்ந்த மருத்துவத்திலும் இந்த … Read more

தன்னுடைய இளமையின் ரகசியத்தை போட்டுடைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற சுவாரஸ்யம்!

தன்னுடைய இளமையின் ரகசியத்தை போட்டுடைத்தார் முதலமைச்சர் ஸ்டாலின்! பள்ளி மாணவர்களிடையே நடைபெற்ற சுவாரஸ்யம்!

தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்களின் 69வது பிறந்த நாள் விழா நேற்று தமிழ்நாடு முழுவதும் அந்த கட்சியினரால் மிகவும் விமர்சையாக கொண்டாடப்பட்டது. ஆனால் இதற்கு முன்னதாக தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் திமுகவினருக்கு எழுதிய கடிதத்தில் தன்னுடைய பிறந்த நாள் விழாவை எந்த விதமான ஆடம்பரமுமில்லாமல் மிகவும் எளிமையாக கொண்டாடுங்கள். ஏழை, எளிய, மக்களுக்கு உதவி புரியுங்கள் என்று தெரிவித்திருந்தார். அதோடு நேற்று சென்னையில் ஒரு பள்ளியில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்ச்சியில் நான் முதலமைச்சர் என்ற திட்டத்தை தொடங்கி … Read more

விரைவில் தொடங்குகிறது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்! பணிகள் மும்முரம்!

விரைவில் தொடங்குகிறது தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர்! பணிகள் மும்முரம்!

இந்த வருடத்திற்கான முதல் சட்டசபை கூட்டத்தொடர் ஜனவரி மாதம் 5ம் தேதி ஆளுநர் உரையுடன் ஆரம்பமானது. ஆளுநர் ரவி உரை நிகழ்த்தினார் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் 2 நாட்கள் நடைபெற்றது. இந்த 2 நாட்களில் அந்தக் கூட்டத் தொடரில் 15 சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டன. இதனைத்தொடர்ந்து சட்டசபை தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்டது. ஆனாலும் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் தமிழக சட்டசபையில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்ட ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்ட நீட் … Read more

10th படிச்சிருக்கீங்களா இதோ வந்துருச்சு செம்ம ஆஃபர்! எல்லோரும் ரெடியா இருங்க!

10th படிச்சிருக்கீங்களா இதோ வந்துருச்சு செம்ம ஆஃபர்! எல்லோரும் ரெடியா இருங்க!

TNHRCE Recruitment 2022 இந்துமதம் மற்றும் தொண்டு நிறுவனத்தில் காலியாகவுள்ள Nurse Pharmacist Sanitary worker பணிக்கு பணியாளர்களை நியமிப்பதற்கான அறிவிப்பு வெளியாகியிருக்கிறது. தகுதியும், விருப்பமுமுள்ள விண்ணப்பதாரர்கள் www.tnhrce.gov.in என்ற அதிகாரப்பூர்வமான இணைய தளத்தில் விண்ணப்பம் செய்யலாம். இந்த பணிக்கு விண்ணப்பம் செய்ய கடைசி நாள் மார்ச் மாதம் 31 ஆம் தேதி அனுமதிக்கப்பட்டிருக்கிறது. இந்த பணிகள் தொடர்பான முழுமையான விபரங்கள் கீழே கொடுக்கப்பட்டிருக்கின்றன. கவனமாகப் படித்து உடனடியாக விண்ணப்பம் செய்யுங்கள். TNHRCE Recruitment 2022 for … Read more