கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

கோவிஷீல்டு கோவாக்சின் கலப்பு தடுப்பூசிகளால் ஏற்படும் அபார பலன்!

கொரோனா தொற்றுக்கு எதிராக முற்றிலும் உள்நாட்டில் ஐதராபாத் பயோடெக் நிறுவனத்தால் தயாரிக்கப்படுகிறது கோவேக்சின் தடுப்பூசி. இங்கிலாந்தின் ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம், சினகா மருந்து நிறுவனமும், ஒன்றாக இணைந்து உருவாக்கி இந்தியாவில் புனே சீரம் நிறுவனம் ஒன்றாக இணைந்து தயாரித்து வழங்குவது கோவிஷீல்டு தடுப்பூசி ஆகும். இந்த இரு தடுப்பூசிகளில் கோவாக்சின் தடுப்பூசியை முதல் தவணையாகவும்,கோவிஷீல்டு தடுப்பூசியை இரண்டாவது தவணையாகவும், செலுத்திக் கொண்டால் நான்கு மடங்கு நோய் எதிர்ப்பு சக்தி கிடைப்பது ஆசியா ஹெல்த்கேர் பவுண்டேஷன் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில் … Read more

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

இந்தத் திட்டம் தமிழகத்திற்கு தேவையில்லாதது! அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு வைத்த முக்கிய கோரிக்கை!

பாட்டாளி மக்கள் கட்சியின் இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ் தமிழக அரசுக்கு அவ்வப்போது பல நல்ல யோசனைகளையும், அரசின் திட்டங்களில் தவறு இருந்தால் அதனை சுட்டிக்காட்டியும், வருகின்றார். அந்த விதத்தில் அவர் தன்னுடைய வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கின்ற பதிவில் தெரிவித்திருப்பதாவது, தமிழகத்தில் காவிரி பாசனப் பகுதியில் விழுப்புரம், கடலூர், உள்ளிட்ட மாவட்டங்களை ஒட்டி இருக்கக்கூடிய ஆழ்கடல் பகுதியில் 8708 சதுர மீட்டர் பரப்பில் ஹைட்ரோ கார்பன் திட்டம் உட்பட ஒட்டுமொத்தமாக 8 திட்டங்களுக்கு மத்திய அரசு … Read more

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

நீங்கள் என்ன வேண்டுமானாலும் பேசி விடலாமா? உயர் நீதிமன்றம் சரமாரி கேள்வி!

பிரதமர் நரேந்திர மோடி, பாஜகவின் தமிழக முன்னாள் தலைவரும் தற்போது புதுச்சேரி ஆளுநராக இருக்கும் தமிழிசை சௌந்தரராஜன், பாஜகவின் மூத்த தலைவர் எச் ராஜா உள்ளிட்டோர் தொடர்பாக பிரபல அரசியல் பேச்சாளர் நாஞ்சில் சம்பத் சமூகவலைதளத்தில் அவதூறாக பேட்டி அளித்ததாக ஏராளமான புகார்கள் காவல்துறையில் வழங்கப்பட்டு இருக்கிறது, இது தொடர்பாக பல வழக்குகள் அவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. இந்த வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் என்று தெரிவித்து நாஞ்சில்சம்பத் தாக்கல் செய்த மனு உயர் நீதிமன்ற … Read more

நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள்! உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

நோய்த்தொற்று பரவலை தடுப்பதற்காக கூடுதல் கட்டுப்பாடுகள்! உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஸ்டாலின் முக்கிய ஆலோசனை!

உருமாறிய நோய்த் தொற்றான ஒமைக்ரான் தொற்று பரவலானது நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கிறது, தமிழ்நாட்டில் புதிய வகை நோய் தொற்று பாதிப்பை கட்டுப்படுத்துவதற்கு மாநில அரசு பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இந்த சூழ்நிலையில், பொங்கல் பண்டிகையை மிக விரைவில் கொண்டாடப்படுகிறது. அப்போது பொதுமக்கள் பல்வேறு வகையான கொண்டாட்டங்களில் ஈடுபடுவார்கள் காணும் பொங்கலின் போது உறவினர்கள் ஒன்றுகூடி மகிழ்ந்திருப்பது வழக்கமாக இருந்து வருகிறது தமிழ்நாட்டில் முன்னரே பல்வேறு கட்டுப்பாடுகளுடன் ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த … Read more

தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

தலைநகர் சென்னையில் 1000க்கும் மேற்பட்ட தெருக்களில் நோய் தொற்று பாதிப்பு! சென்னை மாநகராட்சி அதிர்ச்சித் தகவல்!

தமிழ் நாட்டில் நாளுக்கு நாள் நோய்த்தொற்று பரவல் அதிகரித்துக்கொண்டே செல்கிறது அந்த விதத்தில் மற்ற மாவட்டங்களை விடவும் தலைநகர் சென்னையில் நோய்த்தொற்று பரவல் மின்னல் வேகத்தில் அதிகரித்து வருகின்றது. அதன் அடிப்படையில் நேற்று ஒரே நாளில் சென்னையில் மட்டும் ஆயிரத்து 489 பேர் நோயால் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இது நேற்று முன்தின பாதிப்பான 876 இலிருந்து ஒரேநாளில் 613 என அதிகரித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த சூழ்நிலையில், சென்னை மாநகராட்சி சார்பாக நேற்று ஒரு அதிர்ச்சித் தகவல் … Read more

தம்பி முக கவசம் இப்படித்தான் போடவேண்டும்! முக கவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர்!

தம்பி முக கவசம் இப்படித்தான் போடவேண்டும்! முக கவசம் அணியாதவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்திய முதலமைச்சர்!

நோய் தொற்று தாக்கம் எப்போது குறையும்? என்று எல்லோரும் எதிர்பார்த்து காத்திருக்கின்ற சமயத்தில் தற்சமயம் மீண்டும் நோய்த்தொற்று உருமாறி உலகத்தையே கதிகலங்க வைத்து வருகிறது. தமிழ் நாட்டிலும் ஒவ்வொரு நாளும் நோய் தொற்றினால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே செல்வதை நம்மால் காணமுடிகிறது. தமிழக அரசும் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்தி வருகின்றது. கவசம் அணிவதின் அவசியத்தை வலியுறுத்தி கொண்டுதான் உள்ளது. அதேபோல முதலமைச்சர் ஸ்டாலின் பங்கேற்று கொள்ளும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் தடுப்பூசி செலுத்துவது மற்றும் முக கவசம் அணிவது … Read more

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

அம்மா மினி கிளினிக்குகள் மூடப்பட்டதற்கு உண்மையான காரணம் இதுதான்! சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கம்!

சென்னை வேப்பேரியில் இருக்கின்ற பெரியார் திடலில் நோய்த்தொற்று சிறப்பு சித்த மருத்துவ சிகிச்சை மையத்தை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் சுப்பிரமணியன் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு உள்ளிட்டோர் நேற்று திராவிடர் கழகத் தலைவர் வீரமணி முன்னிலையில் திறந்து வைத்தார்கள். அந்த சமயத்தில் சுகாதாரத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நிருபர்களிடம் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் நோய்த்தொற்று அதிகரித்து வருகிறது. சென்னையிலும் பாதிப்பு தொடர்ந்து அதிகரிக்கும் சூழ்நிலை உள்ளது. சென்னையில் தேனாம்பேட்டை, வளசரவாக்கம், கோடம்பாக்கம், ஆலந்தூர், அடையாறு, பெருங்குடி, … Read more

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு திட்டம்! முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்!

ஒட்டு மொத்த உலகத்திற்கும் உயிர் சுவாசமாக விளங்கிக் கொண்டிருக்கும் உழவுத் தொழிலை போற்றும் விதமாக தமிழர்களின் பண்பாட்டு விழாவாகவும், உழைப்பின் சிறப்பையும், உழவுத் தொழிலுக்கு உயிரூட்டும் சூரியனையும், உறுதுணையாக இருக்கும் கால்நடைகளையும், போற்றிப் பணிகின்ற நன்னாளாக சாதி, மத, பேதம், இன்றி நாம் எல்லோரும் ஓர் இனம் தமிழினம் என்ற உன்னத உணர்வை பிரதிபலிக்கும் விதத்திலும், பொங்கல் திருநாள் கொண்டாடப்படுகிறது. இவ்வளவு சிறப்புமிக்க தமிழர் திருநாள் என்று போற்றப்படும் தைப்பொங்கல் திருநாளை தமிழக மக்கள் அதை சிறப்பாக … Read more

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! ஒரே நாளில் சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பா?

2022 ஆம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத்தொடர் இன்று கூடுகிறது! ஒரே நாளில் சட்டசபை கூட்டத்தொடர் முடித்து வைப்பா?

ஒவ்வொரு வருடத்தின் தொடக்கத்திலும் சட்டசபை கூடும்போது ஆளுநர் வந்து உரையாற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. அந்த விதத்தில் இந்த வருடத்தின் முதல் சட்டசபை கூட்டம் இன்று தொடங்க இருக்கிறது. நோய் தொற்று அச்சுறுத்தல் இருந்து வருகின்ற சூழ்நிலையில், சென்ற சில வருடங்களாக சென்னை கலைவாணர் அரங்கத்தில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது. நோய்த்தொற்று பரவாமல் குறைந்து வந்த சூழ்நிலையில், மறுபடியும் சென்னை தலைமைச் செயலகத்தில் இருக்கின்ற சட்டசபை கூட்ட அரங்கத்தில் இந்த கூட்டத்தை நடத்த ஏற்பாடு மும்முரமாக நடந்து … Read more

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

வானிலை ஆய்வு மையம் மீனவர்களுக்கு விடுத்த கடுமையான எச்சரிக்கை!

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டிருக்கும் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, தமிழகம் மற்றும் புதுச்சேரி, காரைக்கால், உள்ளிட்ட இடங்களில் இன்று மற்றும் நாளை உள்ளிட்ட தினங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் என்றும், நாளை மறுநாள் தென் தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு பகுதிகளில் லேசான மழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது என்றும், மற்ற மாவட்டங்களில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. வருகின்ற ஏழாம் தேதி கடலோர மாவட்டங்கள் புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய … Read more