இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன்! அரையிறுதிக்கு முன்னேறிய பிவி சிந்து!

இந்தோனேசியா ஓபன் பேட்மிண்டன் போட்டி பாலி நகரில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடைபெற்ற பெண்கள் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்று ஆட்டம் ஒன்றில் உலக சாம்பியனான இந்திய வீராங்கனை பிவி சிந்து தென்கொரியாவின் சிம் யூஜினிடம் மோதினார். இந்த ஆட்டத்தில் சிந்து வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறியிருக்கிறார். அதேபோல ஆண்கள் இரட்டையர் போட்டி ஒன்றில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ், ராங்கி ரெட்டி, மற்றும் சீராக் செட்டி இணை மலேசிய நாட்டின் கோஜோ பேய் மற்றும் நூர் இஜுதின் … Read more

உலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

உலக அளவில் 52 லட்சத்தை கடந்த கொரோனா பலி எண்ணிக்கை!

சீன நாட்டில் வெளியான நோய்த்தொற்று பரவல் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது கடந்த 2019ஆம் ஆண்டு சீன நாட்டின் வூஹான் நகரில் இந்த நோய்த்தொற்று பரவல் ஆரம்பித்தது. அதன்பிறகு உலகம் முழுவதும் சுமார் 221 நாடுகளுக்கு இந்த நோய்த் தொற்று பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த நிலையில், இந்த நோய்த்தொற்று பரவல் தொடங்கி ஒரு வருட காலம் ஆகிவிட்ட பின்னரும் கூட அந்த நோய்களின் தாக்கம் இதுவரையிலும் குறையவில்லை. உலகம் முழுவதும் இந்த நோய் தொற்றுக்கு எதிரான … Read more

தொடரும் கனமழை! சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தொடரும் கனமழை! சென்னை உள்பட 10க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, தமிழ்நாட்டில் மறுபடியும் கனமழை பெய்ய ஆரம்பித்து இருக்கிறது. குறிப்பாக சொல்லவேண்டும் என்று சொன்னால் திருநெல்வேலி, தூத்துக்குடி, உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக கனமழை செய்துவருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் நேற்று முன்தினம் அதிகாலை ஆரம்பித்த மழை பிற்பகலில் மிதமாகவும் அதன்பிறகு அதிகமாகவும் பெய்யத் தொடங்கியது. இதன் காரணமாக, தாழ்வான பகுதிகளில் தண்ணீர் குளம் போல் தேங்கி நின்றது. அதேபோல சென்னை உட்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை … Read more

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!

தலைநகர் சென்னையில் விடிய விடிய கொட்டித் தீர்த்த கனமழை! நிம்மதி இழந்த சென்னைவாசிகள்!

தெற்கு வங்க கடல் பகுதியில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக, சென்னையில் மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதனடிப்படையில் சென்னையில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. காலையில் சற்று நேரம் ஓய்வெடுத்த மழை மீண்டும் வேகமெடுக்க தியாகராய நகர், கேகே நகர், வடபழனி, கோடம்பாக்கம்,திருவான்மியூர், புரசைவாக்கம் உட்பட தாழ்வான பகுதிகளில் வழக்கம்போல மழை நீர் சூழ்ந்து தீவுகளை போல காட்சியளித்தன. நகரத்தின் பிரதான … Read more

இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

இன்று தொடங்குகிறது வாக்காளர் பட்டியல் திருத்த சிறப்பு முகாம்! தேர்தல் ஆணையர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!

தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்யபிரதா சாகு வெளியிட்டிருக்கின்றது செய்திக்குறிப்பு ஒன்றில் தெரிவித்து என்னவென்றால், இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின் அடிப்படையில் எதிர்வரும் ஜனவரி மாதம் 1ம் தேதியை தகுதி நாளாகக் கொண்டு புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தம் 1ம் தேதியிலிருந்து ஜனவரி மாதம் 5ஆம் தேதி வரையில் மாநிலம் முழுவதும் நடைபெற இருக்கிறது என கூறியிருக்கிறார். அத்துடன் வாக்காளர்கள் தங்களுடைய பெயரை சேர்ப்பதற்கும், நீக்கம் செய்வதற்கும் வாக்காளர் பட்டியலில் திருத்தம் மற்றும் … Read more

அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அமைச்சர் அறிவித்த திட்டத்திற்கு கடும் எதிர்ப்பு தெரிவிக்கும் ஓபிஎஸ்!

அதிமுகவின் ஒருங்கிணைப்பாளரும் முன்னாள் துணை முதல் அமைச்சருமான ஓ பன்னீர்செல்வம் வெளியிட்டிருக்கக்கூடிய அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது, நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பாக டெல்லியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்று கொண்டு பேசிய தமிழக உணவுத்துறை அமைச்சர் எதிர்காலத்தில் 500 சமுதாய உணவகங்கள் கலைஞர் உணவகம் என்ற பெயரில் அமைக்கப்பட இருப்பதாக தெரிவித்து இருப்பது அம்மா உணவகம் என்ற பெயரை இருட்டடிப்பு செய்யும் திட்டமாகவும், அரசியல் காழ்ப்புணர்ச்சி கொண்ட திட்டமாகவும், இருக்கிறது இதற்கு என்னுடைய … Read more

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

மக்களை தேடி மருத்துவம்! செவிலியர்கள் உட்பட 7 ஆயிரம் பணியாளர்கள் விரைவில் தேர்வு!

சென்னை டி.எம்.எஸ் வளாகத்தில் தமிழக நல்வாழ்வுத்துறை அமைச்சர் சுப்பிரமணியன் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது, தமிழ்நாட்டில் மக்களை தேடி மருத்துவம் என்ற திட்டத்தின் மூலமாக இதுவரை 36 லட்சத்து 33 ஆயிரத்து 843 பேர் மருத்துவ பயன் அடைந்து இருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தினை மேலும் வலுப்படுத்துவதற்காக புதிய பணியிடங்கள் ஏற்படுத்தப்படும் என்று தெரிவித்திருக்கிறார். அதோடு புதிதாக செவிலியர்கள், சுகாதார பணியாளர்கள், உள்ளிட்டோர் பணியில் அமர்த்தப்படுவார்கள் என சட்டசபை … Read more

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

கொஞ்சம் கூட மாற்றம் இல்லை! அப்படியே அதிமுகவை காப்பியடிக்கும் திமுக அரசு!

நாட்டில் மாதிரி சமுதாய சமையல் கூடம் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான ஆலோசனை கூட்டம் டெல்லியில் நடந்தது மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை நுகர்வோர் பாதுகாப்பு உணவு மற்றும் பொது விநியோகத் துறை மற்றும் கைத்தறித் துறை அமைச்சர் பியூஷ் கோயல் தலைமையில் நடந்த இந்த கூட்டத்தில் தமிழக உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி பங்கேற்றார். தமிழக அரசு எல்லா தரப்பு மக்களுக்கும் வருமானம் மற்றும் சமூக பாகுபாடில்லாமல் உணவு பாதுகாப்பினை உறுதி செய்ய கடந்த 40 வருடகாலமாக எல்லோருக்குமான … Read more

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

இந்தியாவில் நேற்றைய பாதிப்பை விட சற்றே அதிகமான நோய் தொற்று பாதிப்பு!

நாட்டில் நோய்தொற்று குறித்த விவரத்தை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் இன்று காலை வெளியிட்டது. அதன் அடிப்படையில் இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 10 ஆயிரத்து 549 பேருக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது. இது நேற்றைய பாதிப்பான வந்து 9119தை விட சற்று அதிகமாகும் என்று சொல்லப்படுகிறது. இதன் காரணமாக, இந்தியாவில் நோய்தொற்று பாதிக்கப்பட்டவர்களின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 3 கோடியே 45 லட்சத்து 55 ஆயிரத்து 431 ஆக அதிகரித்திருக்கிறது கடந்த 24 மணி நேரத்தில் நோய்த்தொற்று … Read more

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்!

இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான கிரிக்கெட் போட்டி! அறிமுக போட்டியிலேயே சதம் அடித்த இந்திய வீரர்!

நியூசிலாந்து அணியுடனான முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் அறிமுக வீரர் ஸ்ரேயாஸ் அய்யர் சதம் அடித்தார். முதல் இன்னிங்சில் இந்திய அணி 345 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. இந்தியா வந்திருக்கின்ற நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகள் கொண்ட உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் பங்கேற்கிறது. இரு அணிகள் மோதும் முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கான்பூரில் நேற்றைய தினம் ஆரம்பமானது. டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ரகானே பேட்டிங்கை தேர்வு செய்தார், முதல்நாளில் சுப்மன்க்கில், ஜடேஜா ஆகியோர் … Read more