ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?

Photo of author

By Parthipan K

ஆட்டோ ஓட்டுனர்கள் போராட்டம்! எதற்காக தெரியுமா?

திருச்சியில் ஆட்டோ ஓட்டுனர்கள் பல்வேறு கோரிக்கைகைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினர்.சிஐடியு ஆட்டோ தொழிலாளர் சங்கத்தினர் ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வலியுறுத்தி திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டம் நடத்தினர்.இந்த போராட்டத்தில் பல்வேறு ஆட்டோ ஓட்டுனர் பங்கு பெற்றனர்.

இவர்கள் மட்டுமல்லாது மாநிலம் முழுவதும் ஆட்டோ ஒட்டுனர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.இவர்கள் பெட்ரோல் டீசல் விலையை ஜிஎஸ்டி வரம்புக்குள் கொண்டுவரவும்,பெட்ரோல் டீசல் விலையை கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் எனவும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.மேலும் முன்னாள் முதலமைச்சர் மு.கருணாநிதி ஆட்டோ ஓட்டுனர்களுக்கு என்று தனி நல வாரியம் அமைத்தார்.ஆனால் அந்த நல வாரியம் தற்போது செயல்பாட்டில் இல்லை எனவும் அவர்கள் ஆர்பாட்டத்தில் கூறினார்.

தற்போது அமைப்பு சாரா ஓட்டுனர்கள் நல வாரியம் என இயங்கி வருவது ஆட்டோ ஒட்டுனர்களுக்கு தனித்த அடையாளம் இல்லாமல் இருப்பதை கட்டுகிறது.ஆட்டோ ஓட்டுனர்களுக்கு தனி வாரியத்தை அரசு மீண்டும் கொண்டு வர வேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.மேலும் கொரோனா பரவல் காரணமாக ஆட்டோ ஓட்டும் தொழில் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது எனவும் ஆட்டோ ஒட்டுனர்களுக்கு உரிய நிவாரணமாக 7500 ரூபாய் வழங்க வேண்டும்.ஆட்டோ ஓட்டுனர்களுக்கு மானிய விலையில் பெட்ரோல்,டீசல் வழங்க வேண்டும் எனவும் கொரோனா நோயால் இறந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு உரிய நிவாரணமும் அவர்கள் வீட்டில் ஒருவருக்கு அரசு வேலையும் தர வேண்டும் எனவும் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர்.

திருச்சி மாவட்டத்தில் மீட்டர் ஆட்டோ என்ற பெயரில் சில நபர்கள் ஆன்லைன் டிஜிட்டல் மீட்டர் பெற்று அதிகளவில் பணம் வசூலித்து வருவதாகவும் அதனை கட்டுபடுத்த அரசு மீட்டர் கட்டணத்தை நிர்ணயிக்க வேண்டும் எனவும் ஆட்டோ ஓட்டுனர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்தனர்.