தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்டங்களிலும் ஓடிக்கொண்டிருக்கும் ஆட்டோகளுக்கான புதிய வாடகை கட்டணத்தை அரசு அறிவிக்கும் என்று அரசு ஊழியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
தமிழ்நாட்டில் கடந்த 2013இல் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்கப்பட்டன. அதன் பின்னர், குறிப்பாக கடந்த சில ஆண்டுகளில் பெட்ரோல்-டீசல் உள்ளிட்ட எரிபொருள் விலை பெரியளவு உயர்ந்துவிட்டது. 2022 ஆம் ஆண்டு ஒரு லிட்டர் பெட்ரோல் விலை ரூ 102.63 க்கும், டீசல் விலை ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
எரிபொருள் விலை உயர்வால் அத்தியாவசியப் பொருட்களின் விலையும் உயர்ந்து வரும் நிலையில், இதன் அடிப்படையில் ஆட்டோ கட்டணங்கள் மாற்றி அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் அப்பொழுது வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழக போக்குவரத்து ஆணையரக அதிகாரிகள் இது குறித்து தெரிவித்திருப்பதாவது :-
ஆட்டோக்களுக்கு டிஜிட்டல் மீட்டருக்கு பதிலாக, பிரத்யேக செயலி கொண்டு வர உள்ளோம். இதுவரை, 1.70 லட்சம் தொழிலாளர்களின் விபரங்களை சேகரித்துள்ளோம். புதிய கட்டண விபரத்தை, தமிழக அரசுக்கு அனுப்பி உள்ளோம். விரைவில், புதிய கட்டணத்தை அரசு அறிவிக்கும் என தெரிவித்து இருக்கின்றனர்.
இதற்கான நடவடிக்கை சீக்கிரத்தில் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.