கார் மோதியதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட ஆட்டோ! பயணி ஒருவர் பலியான பரிதாபம்!

கார் மோதியதன் காரணமாக தூக்கி வீசப்பட்ட ஆட்டோ! பயணி ஒருவர் பலியான பரிதாபம்!

தற்போதுள்ள கால கட்டத்தில் பொறுமை யாருக்குமே இல்லாமல் பொய் விட்டது. தினமும் சாலையில் நடக்கும் விபத்துக்களில் எவ்வளவோ விபத்துக்கள் கவனக்குறைவாலும், அவர்களின் அவசரத்தினாலும், நடைபெற்று விடுகின்றன. விபத்து என்னவோ கண் இமைக்கும் நேரத்தில் நடந்து விடுகிறது. ஆனால், அதில் போகும் உயிர்கள் கணக்கில்லாமல் போகிறது.

நேற்று முன் தினம் சைபராபாத்தில் அப்படி ஒரு சம்பவம் பார்போரின் நெஞ்சை பதை பதைக்க வைத்துள்ளது. அதிவேகமாக வந்த சொகுசு கார் ஒன்று பின்னாலிருந்து ஒரு ஆட்டோவில், மோதியதன் காரணமாக, ஆட்டோவில் பயணித்த பயணி ஒருவர் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பலியாகி உள்ளார்.

சாலையில் செல்லும் மக்களுக்கு எடுத்துக்காட்டாக, நிஜ வாழ்க்கை சம்பவங்களை உதாரணமாக காட்டுவதற்காக இந்த வீடியோ காட்சிகளை தங்களின் ட்விட்டர் பக்கத்தில் சைபராபாத் போலீசார் பதிவிட்டு உள்ளனர்.

அந்த வீடியோவில், ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் இனோர்பிட் மால் அருகே மழையில் நனைந்த சாலையில் அதிவேகமாக சென்ற ஒரு சொகுசு கார், பின்னால் இருந்து ஆட்டோவை இடித்து தள்ளியது. சாலையோரத்தில் மோதியதற்கு முன் அதை கட்டுப்படுத்த முடியாமல் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்ட ஆட்டோ சுழன்று நின்றது. அதில் பயணம் செய்த பயணி அடிபட்டு பலியாவதையும், ஆட்டோ டிரைவர் காயமடைவதையும் அதில் காட்டப்பட்டு இருந்தது.

மதுபானம் அருந்திவிட்டு வாகனத்தை இயக்கும் போது ஏற்படும் அசம்பாவிதங்கள் குறித்து மக்கள் அறியாதவரை இப்படி தான் விபத்துக்கள் தொடர்ந்து கொண்டே இருக்கும். அந்த சொகுசு கார் மற்றும் அதை சேர்ந்த கூட்டாளிகள் அனைவரின் மீதும் கொலை வழக்கு பதியப்பட்டு தேடும் முயற்சியில் இருப்பதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.

Leave a Comment