‘அவன் இவன்’ படப்புகழ் நடிகர் ராமராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

0
78

‘அவன் இவன்’ படப்புகழ் நடிகர் ராமராஜ் திடீர் மரணம்… அதிர்ச்சியில் திரையுலகம்!

அவன் இவன் திரைப்படத்தின் மூலமாக நடிகராக அறிமுகமானவர் நடிகர் ராமராஜ்.

இயக்குனர் பாலா ஆர்யா மற்றும் விஷாலை வைத்து அவன் இவன் என்ற திரைப்படத்தை சில ஆண்டுகளுக்கு முன்னர் இயக்கினார். இந்த திரைப்படத்தில் ஆர்யாவும் விஷாலும் அன்னான் தம்பிகளாக நடித்திருந்தனர். இந்த படத்தில் போலிஸ் அதிகாரியாக தன்னுடைய நகைச்சுவையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்தவர் நடிகர் ராம்ராஜ்.

அவரின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பைப் பெற்றதை அடுத்து, அடுத்து நிறைய படங்களில் நடித்தார். நடிக்க வருவதற்கு முன்னர் ராமராஜ் கூட்டுறவு வங்கி ஒன்றில் பணியாற்றி ஓய்வு பெற்றிருந்தார். இந்நிலையில் கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவு காரணமாக மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் சிகிச்சைப் பெற்று வந்த அவர் இன்று இயற்கை எய்தியுள்ளார்.

இந்த செய்தி சமூகவலைதளங்களில் பரவ, இப்போது ரசிகர்கள் முதல் திரையுலகினர் வரை பலரும் அவருக்கு தங்கள் அஞ்சலிகளை செலுத்தி வருகின்றனர்.