தென் இந்தியாவில் வெளியாகுமா அவதார் 2 ?….சிக்கல் என்ன?
இந்தியாவில் திட்டமிட்டப்படி அவதார் 2-ம் பாகம் வெளியாகுமா என கேள்வி எழுந்துள்ளது.
தி டெ ர்மினேட்டர், ஏலியன்ஸ், டைட்டானிக் உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கிய பிரபல ஹாலிவுட் இயக்குநர் ஜேம்ஸ் கேமரூன், இயக்கத்தில் கடந்த 2009-ம் ஆண்டு அவதார் வெளியானது. உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்ற இந்தப்படம் சினிமாவை அடுத்த தளத்துக்கு கொண்டு சென்றது.
சுமார் 23.7 கோடி அமெரிக்க டாலர் மதிப்பில் உருவான இந்தப்படம் 284 கோடி அமெரிக்க டாலர்களை ஈட்டி பட வரலாற்றில் பெரிய மைல்கல்லை எட்டியது.
இந்தநிலையில், 13 ஆண்டுகளுக்கு பிறகு அவதார் 2-ம் பாகம் வரும் 16-ம் தேதி உலகம் முழுவதும் 160 மொழிகளில் வெளியாக உள்ளது.
இதனிடையே, இந்தியாவில் பல மாநிலங்களில் இந்தப்படம் வெளியாவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது.
குறிப்பாக தமிழ்நாடு, மகாராஷ்டிரா, கேரளா மற்றும் கர்நாடகா
உள்ளிட்ட மாநிலங்களில் இந்தப் படத்தை வெளியிடுவதில் விநியோகஸ்தர்கள், திரையரங்கு உரிமையாளர்களிடை யே பிரச்சனை எழுந்துள்ளது.
படத்துக்கு முதல் வாரத்தில் தங்களுக்கு
தரப்படும் பங்குத் தொகையை விட 5 சதவிகிதம் முதல் 10 சதவிகிதம் வரை அதிகமாக தர வேண்டும் என விநியோகஸ்தர்கள் நிபந்தனை விதித்துள்ளதாக கூறப்படுகிறது.
இதனால் அவதார் 2 திரைப்படம் திட்டமிட்டப்படி வெளியாகுமா என சினிமா ரசிகர்களிடையே சந்தேகம் எழுந்துள்ளது.