தமிழ் திரைப்பட வரலாற்றில் 3D தொழில்நுட்பம் பொருந்திய திரைப்படங்கள் மிகவும் குறைந்த அளவில் மட்டுமே வெளியிடப்பட்டுள்ளது. பொதுவாக ஹாலிவுட் திரைப்படங்களில் இந்த 3D தொழில்நுட்பம் ஆனது பெருமளவில் உபயோக படுத்தப்படுகிறது.
இந்த 3D தொழில்நுட்பத்தில் பிரபலமான நிறுவனங்களான மார்வெல், டிசி போன்ற நிறுவனங்கள் ஹாலிவுட் திரைப்படங்களை மிகவும் அற்புதமாக இயக்கி வருகின்றனர். பெரும்பாலும் இந்த 3D தொழில்நுட்பத்தை உபயோகிக்கும் டெக்னீஷியன்கள் இந்திய திரைப்படங்களில் ஈடுபடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தற்போது அவதார் பட 3D தொழில்நுட்ப டெக்னீஷியன்கள் முதல்முறையாக நமது இந்திய திரைப்படத்தை இயக்க ஒப்பந்தம் செய்துள்ளனர் எனும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த அவதார் படக்குழுவினர் இயக்கும் முதல் இந்திய திரைப்படம் இதுவே என்பது முக்கியமானதாகும்.
இவர்கள் இயக்கப்போகும் இந்தப்படத்தின் ஆதிபுருஷ். இத்திரைப்படம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரிக்கப்பட உள்ளது. இதில் ஹீரோவாக நடிக்கப் போகிறவர் பிரபாஸ். நடிகர் பிரபாஸ் பாகுபலி பகுதி 1 மற்றும் 2 படத்தின் மூலம் இந்திய அளவில் பிரபலமாகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.