சர்வதேச விமான சேவை எப்போது? மத்திய அமைச்சர் தகவல்

0
154
airplane night city

கடந்த மார்ச் மாத இறுதியில் கொரோனா நோய் பரவல் காரணமாக உள்நாடு மற்றும் வெளிநாட்டு விமான சேவையை ரத்து செய்து உத்தரவிட்டது இந்திய அரசு.

கடந்த மாத இறுதியில் உள்நாட்டு விமான சேவையை மீண்டும் துவங்க அனுமதித்தது இந்திய அரசு. இதனையடுத்து குறைந்த அளவிலான விமானங்கள் இந்திய நகரங்களுக்கிடையே இயக்கப்பட்டு வருகின்றன.

வெளிநாட்டிற்க்கு சென்று படித்து வரும் மாணவர்கள், பணியாளர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் உள்ளிட்ட வெளிநாடுகளில் சிக்கி தவித்த இந்தியர்களை ஏர் இந்தியா விமானம் மூலம் திரும்ப அழைத்து வந்தது இந்திய அரசு.

இந்நிலையில் வெளிநாட்டு பயணிகள் விமான சேவை எப்போது துவங்கும் என கேள்வி எழுப்பப்பட்டு வந்தது. தற்போது அதற்கு பதிலளிக்கும் வகையில் விமான போக்குவரத்துத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் உலக நாடுகள் கட்டுப்பாடுகளை தளர்த்துவதன் அடிப்படையில் சர்வதேச விமானங்களை இயக்குவது குறித்து முடிவெடுக்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் சிக்கியிருக்கும் இந்தியர்களை அழைத்து வரும் வகையில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் கூடுதல் விமானங்கள் இயக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Previous articleகொரோனா சிகிச்சை – 4 தனியார் மருத்துவமனைகளை கையகப்படுத்தும் தமிழக அரசு
Next articleஅரசு பள்ளி மாணவர்களுக்கு புதிய சலுகை! தமிழக முதல்வர் உத்தரவு