தமிழகத்தில் சென்னை,மதுரை போன்ற 27 மாவட்டங்களில் ஆவின் நிறுவனம் 10,000 மேற்பட்ட சங்கங்களை அடிப்படையாகக் கொண்டு ஐந்து லட்சத்திற்கும் மேற்பட்ட பால் உரிமையாளர்கள் பால் வழங்கி வருகின்றனர். இதுவரை சங்க உறுப்பினர்களே பால் உரிமையாளர்களிடம் வழங்கி வருகின்றனர். சில காலமாகவே பால் உரிமையாளர்கள் உரிய பணம் தமக்கு வந்து அடைவதில்லை என்று புகார் அளித்து வந்துள்ளனர். இதற்கு முன்னராக வழங்கப்பட்ட ஊக்கத் தொகையும் மூன்று சங்க நிர்வாகிகளால் வழங்கப்பட்டுள்ளது.
ஊழல் முறைகேடு நடவடிக்கைக்காக இந்த ஆண்டு முதல் மூக்கு தொகையை பால் உரிமையாளர்களின் வங்கி கணக்கில் செலுத்தி விடப்படும் என்று மாநில அரசு அறிவித்துள்ளது. இதற்கு சங்க நிர்வாகிகள் எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டம் செய்ய உள்ளதாக திடுக்கிடும் தகவல்களை வெளிப்படுத்தி உள்ளனர். இந்த செயல்முறையை எடுத்து உற்பத்தியாளர் நல சங்க நிர்வாகிகள் சிலர் இந்த அறிவிப்பால் சங்க நிர்வாகம் நலிவுடைந்து போகும் என்று எடுத்துரைத்துள்ளனர். இந்த அறிவிப்பானது தற்சமயம் மதுரையில் அமல் செய்யப்பட்டுள்ளது. எனவே சங்க நிர்வாகம் பிப்ரவரி 24 இல் கண்டன ஆர்ப்பாட்டம், அதனைத் தொடர்ந்து 25-ல் பாலை ரோட்டில் கொட்டும் நிகழ்வு ஆகியவை அரங்கேறும் என்று கூறியுள்ளனர். இதனால் 80 ஆயிரம் லிட்டர் பால் வீணடிக்கப்படும். இது குறித்து ஆவின் நிர்வாகம் கூறுகையில், பால் ஊழியர்களுக்கு அரசு ஊக்கத்தொகை வழங்குகின்றது. இதை வங்கி வழியில் அனுப்பினால் சங்க நிர்வாகிகளுக்கு செல்கின்ற கமிஷன் தடைபடும் என்ற காரணத்தால் இவ்வாறு செயல்படுகின்றனர் என்று தெரிவித்துள்ளனர்.