விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது! முதலமைச்சர் ஸ்டாலினின் சமூக வலைதள பதிவு!

Photo of author

By Sakthi

சமூக நீதி, சமத்துவம் என்றால் முதலில் மக்களின் மனதில் நிற்பது பாட்டாளி மக்கள் கட்சி தான்.

ஆனால் பாட்டாளி மக்கள் கட்சி கையில் எடுத்த அந்த ஆயுதத்தை மக்களின் முன்னேற்றத்திற்காக மட்டுமே பயன்படுத்தி வருகிறது. இருந்தாலும் அதே ஆயுதத்தை ஒரு சில கட்சிகள் கையில் எடுத்துக் கொண்டு சமூகநீதி, சமத்துவம் என தெரிவித்துக் கொண்டு பல விரும்பத்தகாத செயல்களை செய்து வருகின்றன.

குறிப்பாக திருமாவளவன் போன்றோர் சமூகநீதி, சமத்துவம் பற்றி பேசும் போது அதை காண்பவர்களுக்கு சிரிப்பு மட்டுமே வரும். ஏனென்றால் சமூக நீதி சமத்துவம் என்றால், அவர்கள் சார்ந்த சமூகத்திற்கு மட்டும்தான் சமூகநீதியும், சமுத்தவமும் கிடைக்க வேண்டும். மற்ற சமூகத்தினர் எப்படி போனால் எங்களுக்கு என்ன என்று அந்த சமூகநீதியையும், சமத்துவத்தையும் வைத்து அரசியல் செய்து வருகிறார்கள். அதில் தற்போது ஆளும் கட்சியாக இருக்கும் திமுகவும் ஒன்றுதான் என சொன்னால் அது மிகையாகாது.

 

https://twitter.com/mkstalin/status/1594168317644009472?s=20&t=SuMJ7QtMH0wPz3-htbmFJg

தற்போது திமுக ஆளும் கட்சியாக இருந்தாலும் அந்த கட்சி எதிர்க்கட்சி அந்தஸ்தில் இருந்த போது சமூக நீதி மற்றும் சமத்துவம் தொடர்பாக பேசிய போதெல்லாம் திமுகவின் பேச்சு தாழ்த்தப்பட்ட இனத்தவர்களுக்கு மட்டும்தான் சாதகமாக இருந்ததே ஒழிய, மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு எந்த விதத்திலும் அவர்களின் பேச்சு சாதகமாக அமையவில்லை.

இந்த நிலையில், சமூக நீதி கட்சி துவங்கப்பட்ட நாளை முன்னிட்டு முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சமூக வலைதளப் பதிவை வெளியிட்டுள்ளார்.

அவருடைய சமூக வலைதளப் பதிவில் தெரிவித்திருப்பதாவது, ஜாதியின் பெயரால் கல்வி வேலைவாய்ப்பில் உரிமை மறுக்கப்பட்டோருக்கு இட ஒதுக்கீட்டை ஒதுக்கியே தீருவது என்ற நம் நெடும் பயணத்துக்கான முதல் அடி எடுத்து வைக்கப்பட்ட நாள் இது. இந்த நாளில் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் நலனை காக்க உறுதி ஏற்போம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும் தமிழர் என்ற இன உணர்வு மங்கிப் போயிருந்த காலத்தில் சூழ்ச்சியாளர்களை வீழ்த்தி , இனமானம் காத்து, அரசியல் உரிமைகளை வென்றெடுக்க நீதி கட்சி ஏற்படுத்திய பாதை, வரலாறு காட்டும் வெளிச்சம், ஆயிரம் அரிதாரங்கள் பூசி வந்தாலும், விழித்துவிட்ட தமிழனை வீழ்த்த முடியாது என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.