மாணவி பிரியா உயிரிழப்பு எதிரொலி! அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அமலுக்கு வரும் சுகாதாரத் துறை அமைச்சர் அதிரடி!

0
100

சமீபத்தில் சென்னையை சார்ந்த கால்பந்து வீராங்கனை மாணவி பிரியா மருத்துவர்களின் தவறான சிகிச்சை காரணமாக உயிரிழந்த சம்பவம் தமிழகம் முழுவதும் அதிருப்தியை ஏற்படுத்தியது.

கால் மூட்டில் ஜவ்வு கிழிந்து இருப்பதாக தெரிவித்து மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட மாணவி பிரியா பின்பு மேல் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கே அவருக்கு சிகிச்சை வழங்கப்பட்டு வந்தது. இந்த நிலையில், அவருடைய இரு கால்களும் அழுகிய நிலையில் இருப்பதால் அவற்றை அகற்ற வேண்டிய கட்டாயம் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தார்கள்.

அதன் பிறகு கால்களை அறுவை சிகிச்சையின் மூலமாக அகற்றினர் மருத்துவர்கள் அப்போது மாணவி பிரியாவுக்கு மருத்துவர்கள் வழங்கிய தவறான சிகிச்சை. அதாவது, அவருக்கு அறுவை சிகிச்சைக்கு பிறகு போடப்பட்ட கட்டில் தவறு நடந்திருப்பதால் அவருடைய கால் பகுதிகளில் ரத்த ஓட்டம் அறவே நின்று போனது.

இதன் காரணமாக மாணவி பிரியாவின் சிறுநீரகம், இதயம் என்று பல முக்கிய பகுதிகள் உடலில் மெல்ல, மெல்ல செயலிழக்க தொடங்கி இறுதியில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

இந்த நிலையில், சென்னை சைதாப்பேட்டையில் நகர் புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பாக புதிய வீடுகளுக்கான ஒதுக்கீட்டு ஆணையை தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் வழங்கினார். பின்பு அவர் பேசியதாவது, தமிழகத்தில் அறுவை சிகிச்சைக்கு மிக விரைவில் தணிக்கை முறை அறிமுகம் செய்யப்படும் .

மேலும் மருத்துவர்கள் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருப்பதை கவனமாக கையாளும் கால்பந்தாட்ட வீராங்கனை பிரியாவின் மரணத்தால் அவருடைய குடும்பத்தினரின் வலியையும், வேதனையையும், நாம் பங்கிட்டு கொள்வது நம்முடைய கடமையாகும்.

அதே சமயம் அவருக்கு சரியான அறுவை சிகிச்சை செய்தாலும் ரத்தம் வெளியேற்றத்தை தவிர்க்க இறுகும் கட்டு போட்டதை உடனடியாக அகற்றாமல் அலட்சியமாக இருந்திருக்கிறார்கள். அதன் காரணமாக, தான் மாணவி பாதிக்கப்பட்டது தெரிய வந்தவுடன் அவர்கள் இடமாற்றம் செய்யப்பட்டனர் என்று தெரிவித்துள்ளார் அமைச்சர் சுப்பிரமணியன்.

அதேநேரம் மாணவி பிரியா உயிரிழந்த உடன் அவர்கள் பணியிடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார்கள். அது எந்த விதமான குற்றம் எந்தவிதமான தண்டனை என்பதை காவல்துறையினரும், சட்டமும் தான் முடிவு செய்யும்

இது போன்ற அசம்பாவிதம் இனிவரும் காலங்களில் நடந்து விடக்கூடாது. ஆகவே மருத்துவ கல்லூரிகள், மாவட்ட மருத்துவமனைகளில் இருக்கின்ற அறுவை சிகிச்சை துறையின் தலைவர்களை சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு அழைத்திருக்கிறோம் என்று கூறியுள்ளார்.

அவர்களுடன் வரும் 23ஆம் தேதி ஆலோசனை செய்த பிறகு அறுவை சிகிச்சையின் போது கையாளப்பட வேண்டிய விவகாரங்கள், அதற்கு தேவையான கருவிகள் தொடர்பாக தணிக்கை அறிக்கைகள் ஏற்படுத்த உள்ளோம்.

ஐரோப்பிய நாடுகளில் இருக்கின்ற முறைகளையும் ஆராய்ந்து அறுவை சிகிச்சைக்காக புதிய விதிகள் ஏற்படுத்தப்படும். இது நாட்டிலேயே முன்னுதாரணமாக இருக்கும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருக்கிறார்.