காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்!  

Photo of author

By Rupa

 காவல்துறை சார்பில் அரசு பள்ளியில் விழிப்புணர்வு! உற்சாகத்துடன் கலந்துக்கொண்ட மாணவர்கள்!

தேனி மாவட்டம் பெரியகுளம் தாலுகா தேவதானபட்டி காவல் நிலையத்திற்கு உட்பட்ட அரசு மேல்நிலைப் பள்ளியில் தேவதானப்பட்டி காவல் ஆய்வாளர் சங்கர் தலைமையில் தேவதானபட்டி சார்பு  ஆய்வாளர் வேல்மணிகண்டன் முன்னிலையில் இன்று அரசு பள்ளியில் பயிலும் பதினொன்றாம் மற்றும் பனிரெண்டாம் வகுப்பு மாணவ மாணவிகளை நேரில் சந்தித்து கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.
இதில் பேசிய காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்கள் வாழ்க்கையில் எப்படி முன்னேறுவது பற்றியும்  மாணவர்கள் படிப்பில் மிக முக்கியத்துவம் தருவதும் பற்றி பள்ளியும் விழிப்புணர்வு வழங்கினார் . இதில் மாணவர்கள் கஞ்சா , மது , புகைப்பிடிக்கும்  பழக்கம் போன்றவை மாணவர்களிடம்  இருக்கக் கூடாது. பள்ளிக்கு சரியான முறையில் வந்து செல்லவும் மாணவர்கள் நல்ல முறையில் முடி திருத்தம் செய்து பள்ளிக்கு வர வேண்டும் .மாணவர்கள் ஆசிரியர்களிடம் நல்ல முறையில் பேசி பழக வேண்டும்.
மாணவர்கள் பள்ளிக்கு வரும் பொழுது கைபேசி எடுத்து வரக்கூடாது  அது மிகவும் தவறு  எனவும் பெற்றோர்களுக்கு நல்ல  மாணவனாக திகழ வேண்டும் என்றும் ,வாழ்க்கையில்   அரசு பணிக்கு  செல்ல வேண்டும் என்றும் மாணவ மாணவிகளிடம் காவல் ஆய்வாளர் சங்கர் மாணவர்களுக்கு புரியும் படி மிகத் தெளிவாக சிறப்புரையாற்றினார். இந்த கலந்தாய்வில் பள்ளி தலைமை ஆசிரியர்  மற்றும் ஆசிரியர் பெருமக்கள்  கலந்து கொண்டு சிறப்பித்தனர் . கலந்தாய்வின் முடிவில் மாணவ மாணவிகள்  வாழ்க்கையில் நாங்கள் திறம்பட செயல் பட அறிவுறுத்திய காவல்துறைக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.இந்த விழிப்புணர்வில் ஏராளமான மாணவ மாணவிகள் பயன்பெற்றனர்.