தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Photo of author

By Divya

தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

Divya

தமிழக அரசு கூட்டுறவு வங்கியில் அசத்தல் வேலை!! மொத்தம் 2257 காலிப்பணியிடங்கள்.. விண்ணப்பிக்கும் வாய்ப்பை மிஸ் பண்ணிடாதீங்க!!

தமிழகத்தின் பல்வேறு மாவட்ட கூட்டுறவு சங்கங்களில் காலியாக உள்ள உதவியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி இருக்கின்றது. இப்பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் வருகின்ற டிசம்பர் 01 ஆம் தேதி வரை ஆன்லைனில் விண்ணப்பம் செய்யலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேலை வகை: தமிழக அரசு பணி

நிறுவனம்: கூட்டுறவு வங்கி

பணியின் பெயர்: உதவியாளர்

காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை: 2257

கல்வித் தகுதி:

உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் ஏதேனும் ஒரு துறையில் பட்டம் பெற்றிருக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

வயது வரம்பு: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய விரும்பும் நபர்களுக்கு குறைந்தபட்ச வயது 32 என்றும் அதிகபட்ச வயது 50 என்றும் நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

மாத ஊதியம்: உதவியாளர் பணிக்கான ஊதியம் விவரத்தை காண அதிகாரபூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை:

*எழுத்து தேர்வு (Written Exam)

*நேர்காணல் (Interview)

விண்ணப்பக் கட்டணம்: உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் செய்ய பொது பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.250/-

இதர பிரிவினருக்கு கட்டணம் ஏதும் இல்லை என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் வழி

உதவியாளர் பணிக்கு தகுதியும், ஆர்வமும் இருக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு கூட்டுறவு நிறுவனங்களின் இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தை பூர்த்தியிட்டு முறையான ஆவணங்களுடன் விண்ணப்பிக்க வேண்டுமென்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

விண்ணப்பம் செய்ய இறுதி நாள்: 01-12-2023 மாலை 5:45 மணிக்குள் விண்ணப்பம் செய்ய வேண்டும்.