அக்ஸர் படேல் கடைசி நேர அதிரடி…. பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

0
206

அக்ஸர் படேல் கடைசி நேர அதிரடி…. பரபரப்பான போட்டியில் இந்தியா திரில் வெற்றி!

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒரு நாள் போட்டியிலும் இந்தியா வெற்றி பெற்றுள்ளது.

இங்கிலாந்து அணியுடனான ஒருநாள் மற்றும் டி 20 தொடர்களின் வெற்றிக்குப் பிறகு இந்திய அணி வெஸ்ட் இண்டீஸுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி நேற்று தொடங்கியது. இதில் மூத்த வீரர்கள் பலருக்கு ஓய்வு அளிக்கப்பட்டதால், ஷிகார் தவான் தலைமையிலான இந்திய அணி விளையாடி வருகிறது. முதல் ஒருநாள் போட்டியில் கடைசி ஓவர் வரை பரபரப்பாக செல்ல, இந்திய அணி 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இதையடுத்து நேற்று இரண்டாவது போட்டி நடந்தது. அதில் முதலில் பேட் செய்த வெஸ்ட் இண்டீஸ் 311 ரன்கள் சேர்த்து வலுவான இலக்கை நிர்ணயித்தது.அந்த அணியின் தொடக்க ஆட்டக்காரார் ஷாய் ஹோப் சதமடித்து அசத்தினார். அதன் பின்னர் கடினமான இலக்கோடு தொடங்கிய இந்திய அணி சீரான இடைவெளியில் விக்கெட்களை இழந்து வந்தது. ஒரு கட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் கை ஓங்க, கடைசி நேர அதிரடியில் இறங்கிய அக்ஸர் படேல் இந்திய அணியை 2 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்தார்.

அவர் 35 பந்துகளில் 64 ரன்கள் சேர்த்து ஆட்டநாயகன் விருதையும் பெற்றார். இதன் மூலம் இந்திய 2-0 என்ற கணக்கில் தொடரை வென்றுள்ளது.

Previous articleபெண்களுக்கு வரும் அனைத்து பிரச்சனைகளுக்கும் ஒரே தீர்வு! முழு விவரங்கள் இதோ!
Next articleமாநிலங்களவை உறுப்பினர் பதவியை இளையராஜா ஏற்பது எப்போது?  வெளியான தகவல்!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here