சசிகலாவின் திட்டத்தை மொத்தமாக முறியடித்த முதல்வர்! அதிர்ச்சியில் சசிகலா!

0
152

தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எம்ஜிஆர் நினைவிடம் அருகே புதியதாக ஒரு நினைவிடம் கட்டப்பட்டு, அது சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி திறந்து வைக்கப்பட்டது. இதனை இப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி திறந்து வைத்திருக்கிறார். அதன்பிறகு பொதுமக்கள் பார்வைக்கு அனுமதிக்கப்பட்டது.
இந்த நினைவிடம் திறக்கப்பட்டதில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான தமிழக மக்கள் ஜெயலலிதாவின் நினைவிடத்தை கண்டுகளித்து சென்றார்கள். இந்த நிலையில் நேற்றைய தினம் இரவு 8 மணி அளவில் பொதுமக்கள் பார்வைக்கு இந்த நினைவிடத்தில் தடை விதிக்கப்படுகிறது என பொதுப்பணித்துறை அறிவித்திருக்கிறது. திடீர் என்ற தமிழக அரசின் இந்த அறிவிப்புக்கு பின்னால் சசிகலாவின் தமிழக வருகை இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. சென்ற ஜனவரி மாதம் 27ஆம் தேதி சிறையிலிருந்து விடுதலையான சசிகலா ஜனவரி மாதம் 31ஆம் தேதி அளவில் பெங்களூரு மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆகிவிட்டார். அதோடு மட்டுமல்லாமல் அவர் மருத்துவமனையில் இருந்து வெளியே வந்த சமயத்தில் அவருடைய காரில் அதிமுகவின் கொடியின் பறக்கவிடப்பட்டது. இந்த நிகழ்வானது தமிழக அரசியலில் மிகப்பெரிய பரபரப்பை உண்டாக்கியது. அதிமுகவில் தனக்கு உரிமை இருக்கிறது என்பதை காட்டுவதற்காகவே அவர் இவ்வாறு செய்தார் என்று பலரும் கருதுகிறார்கள்.

விரைவில் சசிகலா பெங்களூருவிலிருந்து தமிழகம் வர இருக்கிறார் என்ற தகவல் அவ்வப்போது கசிந்து வருகிறது. அதோடு மட்டுமல்லாமல் அவர் தமிழகம் வரும் சமயத்தில் நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் செல்வார் என்றும் சொல்கிறார்கள். இதில் குறிப்பிடத்தக்க அம்சம் என்னவென்றால் கடந்த 2017 ஆம் ஆண்டு சொத்துக்குவிப்பு வழக்கில் சிறை சென்ற சமயத்தில் சிறைக்குச் செல்வதற்கு முன்னால் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு சென்று மறுபடியும் வருவேன் வந்து அதிமுகவை கைப்பற்றுவேன் என்று சபதம் எடுத்து சென்றார் என்பதுதான். ஆகவே இப்பொழுது அவர் சிறையிலிருந்து விடுதலை ஆகி விட்டபடியால் பெங்களூருவில் இருந்து அவர் நேரடியாக ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு தான் வருவார் என்பதை அனைவரின் யூகமாக இருந்து வருகிறது.

ஆகவேதான் சசிகலா ஜெயலலிதாவின் நினைவிடத்திற்கு வருவதை தடுக்கும் வகையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர் ஆளுமையின் கீழ் வைத்திருக்கும் பொதுப்பணித்துறை மூலமாக பராமரிப்புப் பணிகள் காரணமாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவிடம் தற்காலிகமாக மூடப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்திருக்கிறார் என்று சொல்கிறார்கள்.

Previous articleஇந்த ராசிக்கு இன்று உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை! இன்றைய ராசி பலன் 03-02-2021 Today Rasi Palan 03-02-2021
Next articleவன்னியர் இட ஒதுக்கீடு! நிறைவேறுமா பாமகவின் கோரிக்கை!