அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பூமி பூஜை நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்று கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.
பிரதமர் மோடியின் அயோத்தி வருகை சுதந்திரதினம் ஆகியவற்றின் காரணமாக நேபாளத்தை ஒட்டியுள்ள உத்தரபிரதேச மாநில எல்லைப்பகுதிகளில் காவல்துறை பலத்த பாதுகாப்பு ஏற்படுத்தியுள்ளனர்.
இந்தோ- நேபாள எல்லை காவல் படை உள்ளூர் நுண்ணறிவு பிரிவு மற்றும் நுண்ணறிவு முகாம்கள் எச்சரிக்கையுடன் இருக்க உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்து மற்றும் ரயில் நிலையங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் ரோந்து பணிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சட்டவிரோத செயல்கள் நடைபெறும் எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பணி சவால் மிக்கதாக தெரிகிறது.
எனவே அயோத்தியில் நடைபெறும் ராமன் கோயில் பூமி பூஜையானது வரலாற்றில் இடம்பெறும் சிறப்பு மிக்கதாக கருதப்படுகிறது.