ஜனவரி 22ல் அயோத்தி ராமர் கோயில் கும்பாபிஷேகம்!!! கட்டுமானக் குழுத்தலைவர் அறிவிப்பு!!!
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் கும்பாபிஷேகம் 2024ம் ஆண்டு ஜனவரி 24ம் தேதி நடைபெறும் என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அவர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.
உத்திரப்பிரதேச மாநிலத்தில் உள்ள அயோத்தியில் கடவுள் விஷ்ணுவின் அவதாரம் என்று கருதப்படும் ராமருக்கு பிரம்மாண்டமாக கோயில் கட்டப்பட்டு வருகின்றது. இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் தற்பொழுது வேகமாக பணிகள் நடைபெற்று வருகின்றது.
உத்திரப் பிரதேசம் மாநிலம் அயோத்தியில் தற்பொழுது கட்டப்பட்டு வரும் ராமர் கோயில் பணிகளை கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் அடிக்கல் நாட்டி தொடங்கிய வைத்தார். இந்த ராமர் கோயில் 2.7 ஏக்கர் பரப்பளவில் 57400 சதுர அடியில் மூன்று தளங்கள் கொண்டதாக கட்டப்பட்டு வருகின்றது.
அயோத்தி ராமர் கோயிலை சுற்றி 70 ஏக்கரில் ஸ்ரீராமகுண்டம், ராமாயண நூலகம், அனுமன் சிலை, மகரிஷி ஆராய்ச்சி நிலையம், வால்மீகி ஆராய்ச்சி நிலையம் மூலவர் மண்டபம் உட்பட 6 மண்டபங்கள் அமையவுள்ளது. மூலவரான இராமர் இருக்கும் கோபுரம் 161 அடி உயரத்தில் கட்டப்பட்டுள்ளது.
இதையடுத்து அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் அடுத்த ஆண்டு அதாவது 2024ம் ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடைபெறவுள்ளது என்று கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா அவர்கள் அறிவித்துள்ளார். மேலும் வரும் டிசம்பர் மாதத்திற்குள் முதல் தளத்தின் அனைத்து வேலைகளும் முடிந்து விடும் என்று அவர் கூறியுள்ளார்.