மத்திய அரசு செயல்படுத்தி வரக்கூடிய முக்கியமான திட்டமாக இந்த ஆயுஷ்மான் பாரத் திட்டம் பார்க்கப்படுகிறது. மூத்த குடிமக்கள் ஆகிய 70 வயதிற்கு மேற்பட்டவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயனடைய தகுதியுடையவர்களாக பார்க்கப்படுகிறது.
70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மருத்துவ சிகிச்சை தேவைப்படும் பொழுது அதனை இலவசமாகவே செய்து கொள்ளும் விதமாக 5 லட்சம் ரூபாய் வரை ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் ஆயுஷ்மான் வயது வந்தனா கார்டுகள் மூத்த குடி மக்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.
இது குறித்து தேசிய சுகாதார ஆணையம் தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டிருப்பதாவது :-
ஆயுஷ்மான் பய வந்தனா அட்டையை பெறுவதற்காக மூத்த குடிமக்கள் யாரும் அலைய தேவையில்லை என்றும் அதனை வீட்டில் இருந்தே சுலபமாக விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு மூத்த குடிமக்கள் தங்களுடைய செல்போனில் இருக்கக்கூடிய கூகுள் பிளே ஸ்டோரில் இருந்து ஆயுஷ்மான் செயலியை பதிவிறக்கம் செய்து அதில் பயனாளி ஆகவோ அல்லது ஆபரேட்டராகவோ லாகின் செய்ய வேண்டும். அதன்பின் அதில் காட்டக்கூடிய Captcha குறியீடை கொடுத்து மொபைல் எண் மூலமாக உள் நுழைய வேண்டும்.
அதன்பின் search for beneficiary என்பதனை கிளிக் செய்து அதற்குள் பயனாளருடைய ஆதார் எண் பெயர் போன்றவைகள் சரியாக இருக்கிறதா என சரி பார்த்து ஈ கேஒய்சி காண பயனாளியை தேர்ந்தெடுக்க வேண்டும். அதன் பெண் ஆதார் ஒடிபிஐ உள்ளிட வேண்டும். அதில் பயணருடைய இ கே ஒய் சி சரிபார்க்கப்பட்ட உடன் உங்களுடைய ஆயுஷ்மான் வயவந்தனா கார்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.