பல மணி நேரம் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்த ஐயப்ப பக்தர்கள்! தேவசம் போர்டு வெளியிட்ட தகவல்!
கடந்த 2020 ஆம் ஆண்டில் கொரோனா பெருந்தொற்று காரணமாக அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படவில்லை.கொரோனா பரவல் குறைய வேண்டும் என்பதற்காக அரசானது மக்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்தது. பெரும்பாலும் மக்கள் அதனை பின்பற்றினாலும் ஒரு சிலர் அதனை முறையாக பின்பற்றவில்லை.
இருப்பினும் கடந்த 2022 ஆம் ஆண்டு கொரோனா பரவல் குறைய தொடங்கியது.அதனால் மக்கள் அவரவர்களின் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர்.அதனால் அனைத்து கோவில்களிலும் பக்தர்கள் அனுமதிக்கபடுகின்றது.இந்நிலையில் 2022 -2023 ஆம் ஆண்டுக்கான மண்டல மகர விளக்கு பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோவிலில் கடந்த நவம்பர் மாதம் 16 ஆம் தேதி திறக்கப்பட்டது.
41 நாட்கள் நடைபெற்ற சிறப்பு பூஜைகள் மற்றும் அபிஷேகத்திற்கு பிறகு கடந்த மாதம் 27 ஆம் தேதி மண்டல பூஜை நடந்தது.அன்று இரவு நடை அடைக்கப்பட்டது.அதனையடுத்து மகர விளக்கு பூஜைக்காக கடந்த 30 ஆம் தேதி மீண்டும் நடை திறக்கபட்டது.அப்போது இருந்து தினமும் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வந்தனர்.பக்தர்களின் கூட்டம் அதிகரித்து வருவதினால் சாமி தரிசனத்திற்கு கூடுதலாக ஒரு மணி நேரம் நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு நேரம் நீட்டிக்கப்பட்ட போதிலும் எட்டு முதல் பத்து மணி நேரம் பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சாமி தரிசனம் செய்யும் நிலை நிலவி வருகின்றது.மேலும் மகர விளக்கு பூஜை மற்றும் மகர ஜோதி தரிசனம் வருகிற ஜனவரி 14 ஆம் தேதி நடைபெற உள்ளது.மகர விளக்குதினத்தில் ஐயப்பனுக்கு அணிவிக்கப்படும்.
திருவாபரணங்கள் பத்தனம்திட்டை மாவட்டம் பந்தளம் வலியே கோவில்கள் சாஸ்தா கோவில் பாதுகாக்கப்பட்டு வருகின்றது.இந்த திருவாபரணங்கள் 12ஆம் தேதி பந்தளம் ராஜ பிரதியின் முன்னிலையில் ஊர்வலமாக எடுத்து வரப்படும்.முன்னதாக 11ஆம் தேதி எருமேலியில் பேட்டை துள்ளல் நிகழ்ச்சி அம்பலப்புழை மற்றும் ஆலங்காடு ஐயப்ப பக்தர்கள் குழு சார்பில் நடைபெறும்.