தமிழக கவர்னர் பணி நீக்கம்.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!! 

0
124
Governor action dismissal? Action order of the High Court!!
Governor action dismissal? Action order of the High Court!!

தமிழக கவர்னர் பணி நீக்கம்.. உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!!

கவர்னர்ஆர் என் ரவி மீது ஆளும் கட்சி முதல் தொடங்கி பல கட்சிகள் அவருக்கு எதிராக எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் உயர்நீதிமன்றம் அவரது பதவி குறித்து அதிரடி உத்தரவு ஒன்றை போட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழகத்தில் பல உயிர்கள் இழந்து வரும் நிலையில் அதற்கு தடை மசோதா சட்டம் இயற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையிலும் தற்பொழுது அது காலாவதியான நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது.

ஆன்லைன் சூதாட்டத்தால் தமிழக மக்களின் உயிர்கள் போகும் நிலையை கண்டு கொள்ளாத கவர்னரை கண்டு ஆளும் கட்சி முதல் பல கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

இவர் அரசுக்காக வேலை பார்க்காமல் ஒரு தனிப்பட்ட கட்சிக்காக வேலை பார்த்து வருவதாகவும் பலர் குற்றம் சாட்டி வருகின்றனர்.

அந்த வகையில் ஓர் கவர்னர் பதவியில் இருப்பவர்கள் மற்ற எந்த ஒரு அரசு பதவியிலும் இருக்க கூடாது என்பது சட்டப்படி வரைமுறைகளில் ஒன்றாகும்.

கவர்னர் ஆர் என் ரவி தற்பொழுது புதுச்சேரியில் உள்ள ஆரோ பவுண்டேஷனின் நிர்வாக குழு தலைவராக பணியமர்த்தப்பட்டுள்ளார்.

இதனை வைத்து காஞ்சிபுரத்தை சேர்ந்த கண்ணதாசன் என்பவர் ஒரு அரசு பதவியில் இருந்து கொண்டு மற்றொரு அரசு ரீதியான பதவியில் பணி நியமனம் இருப்பதால் இவரது ஆளுநர் பதவியை ரத்து செய்யும் படி மனு தாக்கல் செய்திருந்தார்.

ஆனால் உயர் நீதிமன்றம் இந்த மனுவானது விசாரணைக்கு உகந்தல்ல எனக் கூறி உத்தரவிட்டதோடு இந்த வழக்கை தள்ளுபடி செய்துள்ளது.