இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!! 

Photo of author

By Rupa

இனி ஒரு மாதத்திற்கு முன்பே முன்பதிவு செய்பவருக்கு தான் ஐயப்பன் தரிசனம்!! தேவ்சம்போர்ட் போட்ட புதிய ரூல்ஸ்!!

வருடம் தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை புரிகின்றனர். அவ்வாறு வரும் பக்தர்கள் உடனடி தரிசனம் பெறுவதற்கு என்று சிறப்பு முன் பதிவு செயல்பட்டு வந்தது. இந்த முன்பதிவை நிலக்கல் என தொடங்கி பம்பை வரை கிட்டத்தட்ட 8 இடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.தற்பொழுது இது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இங்குள்ள கவுண்டர்கள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அதேபோல ஆன்லைன் மூலமும் முன்பதிவு செய்யப்படும் வசதியும் உள்ளது. இந்த உடனடி தரிசனம் முன்பதிவானது தற்பொழுது ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த முன்பதிவை நிலக்கல் என தொடங்கி பம்பை வரை கிட்டத்தட்ட 8 இடத்திற்கு மேல் எடுத்துக்கொள்ளும் வசதி இருந்தது.தற்பொழுது இது ரத்து செய்யப்பட்டு உள்ளதால் இங்குள்ள கவுண்டர்கள் எடுக்கப்படும் என்று கூறியுள்ளனர்.

அதுமட்டுமின்றி ஒரே நேரத்தில் லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கோவிலில் குவிந்து விடுகின்றனர்.இதனால் பத்து மணி நேரத்திற்கு மேலாக சாமி பார்க்க காத்திருக்க வேண்டி இருப்பதால் தேவசம்போர்ட் இதனை தற்போது ரத்து செய்துள்ளது. அது மட்டுமின்றி இனிவரும் காலங்களில் ஆன்லைன் முன்பதிவு மட்டும் இருக்கும் என்று திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். அதேபோல இந்த முன்பதிவானது ஒரு மாதத்திற்கு முன்பே தொடங்கிவிடும்.

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு வரும் பக்தர்கள் ஒரு மாதத்திற்கு முன்பாகவே முன்பதிவு செய்து கொள்ளலாம். மேலும் ஒரு நாளில் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டும்தான் தரிசனம் செய்ய அனுமதி என்றும் கூறியுள்ளனர். இதனால் கூட்டத்தை கட்டுப்படுத்துவதுடன் அனைத்து பக்தர்களும் முறையாக சாமியை பார்க்க இயலும்.