ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

Photo of author

By Jayachithra

ரகசிய திருமணம் செய்த பிரபல சீரியல் நடிகை!! ஹனிமூன் புகைப்படத்தால் ரசிகர்கள் அதிர்ச்சி!!

கோலிவுட் சின்னத்திரையில் சன் டிவியில் ஒளிபரப்பாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற தொடர் தான் அழகு. இத்தொடரில் சஹானா நடிகை ரேவதியின் மகளாக காவியா என்ற கேரக்டரில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலம் அடைந்தார்.

இதனைத் தொடர்ந்து இவர் விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல்நிலவு என்ற தொடரிலும் நடித்து இருக்கின்றார். பின், சுந்தரி நீயும் சுந்தரன் நானும் என்ற தொடரில் வில்லியாக நடித்திருந்தார். அத்துடன் தற்போது தாலாட்டு மற்றும் கண்ணான கண்ணே போன்ற தொடர்களில் நடித்து வருகிறார்.

இவர் சீரியல் மட்டுமல்லாமல் சில திரைப்படங்களிலும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கின்றார். இந்த நிலையில் சஹானா சமீபத்தில் டாக்டர் அபிஷேக் என்பவரை ரகசிய திருமணம் செய்து கொண்டுள்ளார்.

https://www.instagram.com/reel/CR6Hd_Ah0FF/?utm_source=ig_web_copy_link

மேலும் ஆடிமாதம் பிறப்பதற்கு முன் திருமணம் செய்ய வேண்டி இருந்த காரணத்தால் அவர்கள் அவசர அவசரமாக யாருக்கும் சொல்லாமல் திருமணம் செய்துள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் ஆகஸ்ட் 14ம் தேதி பிரமாண்டமாக வரவேற்பு நடைபெற இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருக்கிறது.

இந்த நிலையில் தன் கணவருடன் தேன்நிலவு சென்ற புகைப்படங்களை தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கிறார். இதனை கண்ட ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துக்களை கூறி வருகின்றனர்.