பி எட் சிறப்பு கல்வி பட்டப்படிப்பு விண்ணப்பம்! ஐந்து நாட்கள் மட்டுமே உள்ளது மாணவர்களே முந்துங்கள்!
தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் பி.எட் சிறப்பு கல்வி பட்டப் படிப்புக்கான மாணவர் சேர்க்கை கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் ஒன்றாம் தேதி தொடங்கியது.2021 ஆம் ஆண்டுக்கான பி.எட் சிறப்புக் கல்வி பட்டப்படிப்புக்கான நிகழ்நிலை இணைய வழி விண்ணப்பம் மற்றும் விளக்கக் கையேடு போன்றவற்றை தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டது.
பி.எட் சிறப்புக் கல்வி படிப்பானது பார்வைக் குறைபாடு,செவித்திறன் குறைபாடு மற்றும் அறிதிறன் குறைபாடு ஆகிய பிரிவுகளிலும் தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் வழங்கப்படுகிறது.மேலும் கடந்த 2020 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் ஒன்றாம் தேதி தொடங்கிய விண்ணப்ப பதிவு அக்டோபர் 31 ஆம் தேதி முடிவடைந்தது.
அதனை தொடர்ந்து 2023 ஆம் ஆண்டுக்கான பி எட் சிறப்பு கல்வி பட்ட படிப்புக்கான இணைய வழி விண்ணப்ப படிவம் மற்றும் விளக்க கையேடு பல்கலைக்கழகத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.இந்த படிப்பிற்கான விண்ணப்ப பதிவு முன்னதாகவே தொடங்கியது.மேலும் இந்த படிப்பில் சேர விருப்பம் உள்ளவர்கள் வரும் பிப்ரவரி எட்டாம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.இது குறித்து கூடுதல் விவரங்கள் பெற 044 24306617 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என அறிவித்துள்ளனர்.